இந்நாட்டில் இருக்கும் சர்ச்சைக்குரிய சமய போதகர் ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத்திடமிருந்து மலேசியாவுக்கு இதுவரை எந்தவித வேண்டுகோளும் வரவில்லை என்று தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பாக்கார் கூறினார். அவ்வாறு அவசியம் ஏதும் இந்தியாவிற்கு தேவைப்பட்டால் அது மலேசிய நாட்டின் தேசிய சட்டத்துறை அலுவலகத்தின் மூலம் மனு செய்ய வேண்டும் என்றார். இதுவரை இந்தியாவிற்கு எந்தவித தடையும் விதிக்கப்பட வில்லை. உதவி கேட்கும் இந்தியா அதனை முறையாக நாட்டின் சட்டத்துறை அலு வலகத்தின் மூலம் அதனை மேற்கொள்ள வேண்டும் என்று நேற்று வாட்ஸ்ஆப் மூலம் தெரிவித்தார். ஸாஹிர் நாயக்கை கைது செய்யுமாறு இந்திய அரசாங்கத் திடமிருந்து கோரிக்கை ஏதும் வந்ததா என்று அவரிடம் கேட்ட போது டான்ஸ்ரீ காலிட் இவ்வாறு தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்