நாட்டின் மலேசிய இந்தியர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருந்த நீல பெருந்திட்டத்தை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று அறிவித்த வேளையில், இது ஒரு நாடகமோ, வெட்டிப் பேச்சோ அல்லது தேர்தல் தந்திரமோ கிடையாது என்றும், மக்களுக்கு உண்மையாகச் சேவையாற்ற வேண் டும் என்ற அரசாங்கத்தின் கடப்பாட்டை இது பிரதிபலிக்கின்றது என்றும் வலியுறுத்தினார். இப்பெருந்திட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்குகள் நிர்ணயிக்கப்பட்ட காலவரைக்குள் நிறைவேற்றப்படுவதை உறுதி செய்யும் பொருட்டு பிரதமர் துறையின் கீழ் ஒரு சிறப்புப் பிரிவு அமைக்கப்படும் எனவும், இந்த நோக்கத்திற்காக சுயேச்சையாக இயங்கு முறையும் அமல்படுத்தப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார். இந்தியர்களுக்கென பிரத்தியேகமாக இந்த நீல பெருந்திட்டத்தை தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில் அவர் நேற்று அறிமுகம் செய்தார். அடுத்த பத்தாண்டுகளில் இந்திய சமூகத்தினரை வலுப்படுத்துவதற்கு இத்திட்டம் வகை செய்யும் என்று அவர் தனது உரையில் தெரிவித்தார். அவர் மேலும் பேசுகையில்: கல்வி, வாழ்வாதாரம், சமூக விவகாரங்கள் உள்ளிட்ட, இந்திய சமூகத்தினரை பாதிக்கும் பல்வேறு முக்கியமான பிரச்சினைகளுக்கான தீர்வுகளை இத் திட்டம் உள்ளடக்கியுள்ளது. மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் இது ஓர் உண்மையான மைல்கல். கீழ்மட்ட நிலையிலிருந்து பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியதால், இத்திட்டத்தை பூர்த்தி செய்ய ஈராண்டுகள் பிடித்தன. இதனை நாங்கள் தொடங்கும்போது, சாத்தியமான வரை அனைத்து ஏழை இந்தியர்களையும் சென்றடைய வேண்டும் என்பதே எங்கள் குறிக்கோள் என்றார். இந்த நீல பெருந்திட்டத்தில் இடம்பெற்றுள்ள அம்சங்களில் கீழ்க்காண்பவை அடங்கும்: * வரும் 2026-க்குள் அனைத்து நிலையிலுமான சிவில் சேவைகளில் 7 விழுக்காடு இந்தியர்களின் பங்கேற்பை அரசாங்கம் உறுதிப்படுத்தும்; * உள்நாட்டு உயர்க்கல்வி நிலையங்களில் இந்திய மாணவர்களின் பங்கேற்பை குறைந்தது 7 விழுக்காடாக அதிகரிக்க அரசாங்கம் தலையிடும்; * இந்திய சமுதாயத்தில் உள்ள ஏழ்மை நிலையிலான மக்களுக்கு பி.என்.பி அல்லது பெர்மோடாலான் நேஷனல் பெர்ஹாட் கீழ் வெ.50 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்; * 1957-ஆம் ஆண்டுக்கு முன்பு மலேசியாவில் பிறந்த அல்லது இங்கு தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதற்கு சிறப்பு அனுமதி முறை அறிமுகம் செய்யப்படும் ஆகியன பிரதமர் அறிவித்த திட்டங்களில் அடங்கும். நாட்டில் இன்னும் சுமார் 25,000 இந்தியர்களுக்கு குடியுரிமை கிடைக்கவில்லை என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்