தன் ஆசிரியர் வீசிய நாற்காலி தாக்கியதில் தலையில் காயமுற்றதாகக் கூறும் எட்டு வயது பள்ளி மாணவனுக்கு தலையில் எட்டு தையல்கள் போடப் பட்டதாக அச்சிறுவனின் வாவா என அறியப்படும் 34 வயது தாயார் கூறியுள்ளார். இங்குள்ள ஒரு பள்ளியின் வகுப்பறையில் கடந்த வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில் அச்சம்பவம் நடந்துள்ளது. அதையடுத்து தலையில் ஆழ மான அகலமான காயம் ஏற்பட்டதைக் கண்டு அதிர்ச்சியுற்றேன். அத்தொடக்கப்பள்ளியின் இரண்டாம் வகுப்பு ஆசிரியர் வேறொரு மாணவரை திட்டிக் கொண்டு அவர் மீது நாற்காலியை வீசினார். எனினும் அது குறிதவறி தன் மகனின் தலையை காயப்படுத்தியதாக தன்னிடம் கூறப்பட்டது என அத்தாய் தெரிவித்துள்ளார். அதே பள்ளி ஆசிரியரான வாவாவின் கணவர் விவரம் அறிந்து அச்சிறுவனை சிகிச்சைக்காக குயின் எலிசெபத் மருத்துவமனை 1 க்கு கொண்டு சென்றுள் ளார். சம்பவம் தொடர்பில் போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. இதனிடையே பெற்றோரின் புகாரையடுத்து இவ்வழக்கு போலீஸ் புலனாய்வில் உள்ளது என மாநில கல்வி இயக்குநர் டத்தோ மைமுனா சுஹாய்புல்கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்