நாட்டின் நடப்பு அரசாங்கத்தின் கீழ் பல தவறுகள் நிகழ்வதால் இந்த உலகம் எப்படி மலேசியாவை மதிக்கும் என்று கேள்வி எழுப்பியுள்ளார் துன் டாக்டர் மகாதீர் முகமட். தனது இணையத்தள பக்கத்தின் பதிவேற்றத்தில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். மலேசியாவை இந்த உலகம் மதிக்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், இந்த உலகம் இந்த நாட்டை ஏன் மதிக்க முடியாது என்பதற்கான காரணங்களை முன் வைத்தார். இதில் முதலிடம் வகிப்பது இந்நாட்டின் ஊழலின் அளவு. உலகிலேயே ஊழல் நிறைந்த 10 நாடுகளில் ஒன்றாக மலேசியா இடம்பெற்றுள்ளது. இதுதான் மலேசியாவின் முத்திரை. 1எம்.டி.பி. மோசடி இதில் அடங்கும். கோடிக் கணக்கில் ஏற்பட்டுள்ள பண இழப்பு, 1எம்.டி.பி. விசாரணையில் மலே சிய அட் டர்னி ஜெனரல் ஒத்து ழைக்கவில்லை என்று சுவிட் சர்லாந்து அட்டர்னி ஜெனரல் கூறியிருப்பது ஆகியவற்றை அவர் கோடி காட்டினார். பிரதமரின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் உள்ள வெ.260 கோடியையும் தாம் இங்கே குறிப்பிட விரும்புவதாக துன் டாக்டர் மகாதீர் மேலும் கூறினார். உல கத்திற்கே தெரிந்த உண்மைகள் இவை. மலேசியர்களுக்கு இதைவிட அதிகம் தெரியும். மலேசிய அரசாங்கம் பெரும் கடனில் மூழ்கியுள்ளது என்பதை அவர்கள் அறி வார்கள். இந்த சூழலில் மலேசியாவை உலகம் மதிக்க வேண்டும் என்று நஜீப் கூறு கிறார். மலேசியாவை மதிப்ப தற்கு என்ன இருக்கிறது என்று அவர் கேள்வி எழுப்பினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்