img
img

பிரதமர் இன்று அறிவிக்கும் இந்தியர்களுக்கான பெரும் திட்டம்.
ஞாயிறு 23 ஏப்ரல் 2017 10:29:27

img

பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவிருக்கும் இந்தியர்களுக்கான பிரதான வியூகப் பெருந்திட்டம் ( புளூபிரிண்ட்) அடுத்த பத்து ஆண்டுகளுக்கு இந்தியர்களின் ஏற்றமிகு வாழ்க்கையை காணும் நிலை ஏற்படுமா? அல்லது முன்பு அறிவிக்கப்பட்ட பெருந்திட்டங்களைப் போல கானல் நீராகுமா? கடந்த 60 ஆண்டு காலமாக அரசாங்கத்தை வழிநடத்தி வரும் தேசிய முன்னணி, மலேசிய இந்தியர்களின் பிரதான வியூக மேம்பாட்டுத் திட்டங்களை அமல்படுத்தாத காரணத்தினாலேயே இந்திய சமூகம் பல்வேறு இன்னல்களுக்கும் துயரங்களுக்கும் ஆளாகி உள்ளது என்ற சமுதாயத்தின் பரவலான குற்றச்சாட்டுகள் மத்தியில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் இன்று புத்ரா உலக வாணிப மையத்தில் இந்தியர்களுக்கான பிரதான வியூக பெருந்திட்டத்தை அறிவிக்கிறரார். நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையும் நிலையில் தேசிய நீரோட்ட வளர்ச்சியிலிருந்து ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட இனமாக 60 விழுக் காடு இந்தியர்கள் இருக்கும் வேளையில் இந்த பிரதான வியூக பெருந்திட்டம் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்ற கேள்வியோடு பிரத மரின் அறிவிப்புக்காக இந்தியர்கள் காத்திருக்கின்றனர். கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட 11 ஆவது மலேசிய புதிய பொருளாதாரத் திட்டத்தில் ( 2016-2020) ஒரு பகுதியாக இந்தியர்களை சமூகவியல், கல்வி, பொருளாதாரம் ஆகிய முக்கோண வியூக அடிப்படையில் பிரதான வியூக பெருந்திட்டம் அறிவிக்கப்படும் என்று செய்யப்பட்ட அறிவிப்புக்கு ஏற்ப இந்த புதிய திட்டம் இன்று அறிமுகமாகிறது. இந்தியர்களின் பிரதான அரசியல் கட்சியான மஇகாவின் மூலம் கடந்த 1975 ஆம் ஆண்டு டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தலைமைத்துவத்தில் உரு வாக்கப்பட்ட இந்திய சமுதாயத்திற்கான நீண்ட கால அடிப்படையிலான செயல் வரைவுத்திட்டம் செயல்படுத்துவதிலிருந்து விடுப்பட்ட துயரத்திற்கு பின்னர் அடுத்த 24 ஆண்டுகளுக்கு எந்தவொரு பிரதான வரைவுத்திட்டத்தையும் மஇகா அரசாங்கத்திடம் முன்வைக்கவில்லை. நாடு 21 ஆம் நூற்றாண்டை காலடி எடுத்து வைக்கும் நிலையில் டத்தோஸ்ரீ சாமிவேலு எட்டாவது மலேசியத் திட்டத்தை அடிப்படையாக கொண்டு ( 2001-2005) ஒரு பிரதான திட்டத்தை கடந்த 1999 ஆம் ஆண்டு அரசாங்கத்திடம் பரிந்துரை செய்தார். ‘மலேசிய இந்தியர்களும் 2 ஆவது சுற்றும்’ என்ற அந்த பிரதான திட்டம் எட்டாவது மலேசியத் திட்டத்தின் ஒரு பகுதியாக இருந்த போதிலும் அப்போதைய பிரதமர் துன் மகாதீர் முன்வைத்த 2020 தூர நோக்கு லட்சியத்தை அடிப்படையாக கொண்டு மஇகாவின் கல்விக்குழுத் தலைவர் டான்ஸ்ரீ மாரிமுத்து தலைமையில் அந்த பிரதான திட்டம் வரையப்பட்டது. * வருகின்ற 2020 இல் மலேசிய இந்தியர்கள் உயர் வருமானம் பெறுகின்ற தொழில் நுட்பத்திறன் பெற்ற மலேசியர்களாக விளங்குவதை உறுதி செய்தல். * இந்தியர்களின் பொருளாதார சொத்துடைமையை 1.5 விழுக்காட்டிலிருந்து 3 முதல் 5 விழுக்காடு வரையில் உயர்த்துதல் * அரசாங்க உயர்க்கல்விக்கூடங்களில் இந்தியர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப நியாயமான அளவில் மாணவர்களின் எண்ணிக்கை சேர்த்தல் * தொழில்நுட்ப கல்லூரிகளில் குறிப்பாக தோட்டப்புறங்களிலிருந்து வெளியேறுகின்ற மற்றும் நகர்ப்புறங்களில் குடிவாழ் பகுதியில் உள்ள குறைந்த கல்வியை பெற்ற இந்திய மாணவர்களை பெருமளவில் சேர்த்தல் * சமூகவியல் பிரச்சினைகளை களைவதற்கு ஆண்டுதோறும் அரசாங்கத்திடமிருந்து கணிசமான மானியம் பெறுதல், * தமிழ்ப்பள்ளிகளை தொடர்ந்து நிலைநிறுத்தல் * தகுதி வாய்ந்த இந்திய மாணவர்கள் உயர்க்கல்வி பெறுவதற்கு அரசாங்க உபகாரச் சம்பளம் கிடைக்கக்கூடிய மாணவர்களின் எண்ணிக் கையை உயர்த்துதல் * அரசாங்க சேவையில் அதிகமாக இந்தியர்கள் பணியாற்றுவதை உறுதி செய்தல் * அரசாங்க உயர்ப்பதவிகள் மற்றும் ஜி.எல்.சி. எனப்படும் அரசாங்க சார்பு நிறுவனங்களில் இந்தியர்களுக்கு உயர் பதவிகள் வழங்குதல் என்று பல வகையான பரிந்துரைகள் மலேசிய இந்தியர்களும் 2 ஆவது சுற்றும் என்ற பிரதான வரைவுத்திட்டத்தில் மஇகா முன்வைத்தது. ஆனால், இந்த பரிந்துரைகள் எந்த அளவிற்கு செயல்வடிவம் கண்டுள்ளது என்று 18 ஆண்டுகளுக்கு பிறகு மீள்பார்வை செய்தால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது என்பதற்கு தற்போது இந்தியர்கள் எதிர்நோக்கி வரும் இன்னல்களே தக்க சான்றாகும். இந்நிலையில் இன்று பிரதமர் அறிவிக்கவிருக்கும் பிரதான வியூக பெருந்திட்டம், மலேசிய இந்தியர்களின் சமூக பொருளாதார இன்னல்களைக் களைவதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னராவது நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்துவதற்குரிய முழுமைப்பெற்ற செயல்வடிவத் திட்டமாக இருக்குமா என்று இந்திய சமூகம் ஆவலுடன் எதிர்பார்க்கிறது. இந்த பிரதான திட்டம் வெறும் வார்த்தைகளாலும் அறிவிப்புகளினாலும் இந்தியர்களுக்கு இனிப்பை தந்துவிடக்கூடிய வெறும் தேர்தல் வாக்குறுதிகளாக இருந்து விடக்கூடாது. மாறாக அடித்தட்டு மக்கள் வரையில் பாய்ந்து சென்று அவர்களை தேசிய பொருளாதார நீரோடையில் சேர்க்கக்கூடிய ஓர் உண்மையான செயல்வடிவத்திட்டமாக இருக்க வேண்டும் என்றே இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இந்திய சமூகத்தில் இருந்து வரும் நாடற்றவர்கள் பிரச்சினைக்கு ஒரேடியாக முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய திட்டமாகவும் இது அமைய வேண்டும். மலேசியாவில் பிறந்து இங்கே வளர்ந்து இன்னமும் நாடற்றவர்களாக இந்தியர்கள் இருப்பார்கள் என்றால் அது வெறும் கானல் நீராகவே ஆகிவிடும். எனவே மஇகாவின் வாயிலாக பிரதமர் அறிவிக்கும் அந்த பெருந்திட்டம் மலேசிய இந்தியர்களின் ஒரே பிரதிநிதியான மஇகா உறுப்பினர்கள் மற்றும் தலை வர்களின் தேவைகளை நிறைவு செய்வதாக இல்லாமல் நாட்டில் உள்ள ஒட்டு மொத்த இந்தியர்களின் தேவைகளையும் நலன்களையும் பாது காக்கக்கூடிய, நீண்ட கால அடிப்படையில் எல்லா நிலைகளிலும் அவர்களுக்கான பாதுகாப்பு கட்டமைப்பையும் வலையத்தையும் ஏற்படுத்தக்கூடிய அர ணாக இருக்க வேண்டும் என்றே இந்தியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img