ராமநாதபுரம் அருகே ரயில் முன் பாய்ந்து காவலர் ரகுவரன் தற்கொலை செய்து கொண் டார்.
திருவாடானை பாரூர் பகுதியைச் சேர்ந்தவர் குணசேகரன். இவரது மகன் ரகுவரன் . இவருக்கு வயது 26. இவர் ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவில் காவலராகப் பணியில் சேர்ந்தார். இதைத் தெடர்ந்து, ராமநாதபுரம் ஆயுதப்படை பிரிவு காவல்துறை குடியிருப்பில் தனது அக்காவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் ரகுவரன் மருத்துவ விடுப்பு எடுத்ததிருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விடுமுறை கடந்த 7.3.2015 அன்று முடிவடைந்தது.
இதைத் தொடர்ந்து, விடுப்பு தொடர்பாக மருத்துவ அறிக்கை எதுவும் கொடுக்காமலும், பணிக்கு செல்லாமலும் தொடர்ந்து ஓய்வில் இருந்து வந்துள்ளார். இதனிடையே காவல்துறை உயர் அதிகா ரிகளை ரகுவரனின் உறவினர்கள் சந்தித்து மீண்டும் பணியில் சேர்க்க கேட்டுக்கொண் டதாகத் தெரிகிறது.
இந்நிலையில் ரகுவரன் நேற்று காலை தனது மோட்டார் சைக்கிளில் வீட்டில் இருந்து சென்றுள்ளார். பின்னர் வழுதூர் ரயில்வேகேட் பகுதியில் மோட் டார் சைக்கிளை நிறுத்திவிட்டு தண்டவாளத்தில் 20 அடி தூரம் நடந்து சென்று செல் போன், போலீஸ் அடையாள அட்டை, டைரி ஆகியவற்றை வைத்து விட்டு நின்று கொண்டுடிருந்ததாகக் கூறப்படுகிறது.
அப்போது கன்னியாகுமரியில் இருந்து ராமேசுவரம் நோக்கி சென்று கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென பாய்ந்து ரகுவரன் தற்கொலைக்குக் முயன்றுள்ளார்.
இதனால், ரயிலில் அடிபட்டு தூக்கி வீசப்பட்ட ரகுவரன் படுகாயத்துடன் உயிருக்குப் போராடிய நிலையில் அலரித்துடித்துள்ளார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றுள்ளனர். ஆனால் அதற்குள் ரகுவரன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கேணிக்கரை காவலர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ராமேசுவரம் ரயில்வே காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அவர்கள் ரகுவரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு ஊழியர்கள் தற்கொலை செய்துகொள்வது தொடர்ந்து நடந்து வருகின்றது. வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். சில தினங்களுக்கு முன்னர் சென்னையில் ரேஷன் கடை ஊழியர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இவர்கள் இருவருவரின் தற்கொலைக்கும் மேலதிகாரிகளின் அழுத்தம் காரணமாக இருந்தது. இந்நிலையில் காவலர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.