கஞ்சாவைக் கலந்து பிஸ்கெட்டுகள் தயாரித்து விற்பனை செய்து வந்த ஒரு பத்திரிகையாளர், ஒரு பல்கலைக்கழக மாணவர் உள்ளிட்ட ஐவரை போலீசார் கைது செய்தனர். புக்கிட் அந்தாரா பங்சாவிலுள்ள இரண்டு வீடுகளில் போலீசார் அதிரடிச் சோதனை மேற்கொண்ட போது 24 வயது முதல் 27 வயது வரை யிலான இந்த ஐவரும் பிடிபட்டனர். மேலும் கஞ்சாவையும், தயாரித்து வைக்கப்பட்டிருந்த கஞ்சா பிஸ்கட்டுகளையும் கைப்பற்றினர். முதல் வீட்டில் நான்கு அடுக்கு கஞ்சா மற்றும் கஞ்சா பிஸ்கட்டுகளுடன் கஞ்சா பவுடரும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என்று அம்பாங் ஜெயா மாவட் டப் போலீஸ் தலைவர் ஏஎஸ்பி ஹம்சா அலியாஸ் தெரிவித்தார். அடுத்து உடனடியாக மற்றொரு வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டபோது அந்த வீடு பிஸ்கட்டுகள் தயாரிக்கும் கூடமாக இருந்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அவர் சொன்னார். இந்த கஞ்சா பிஸ்கட்டுகள், இணையம் வழியாக விற்கப்பட்டு வந்துள்ளது. இவர்கள் தொழிலை இப்போதுதான் புதிதாக தொடங்கியுள்ளனர் என்பதும் தெரிய வந்திருக்கிறதுஎன்று ஏசிபி ஹம்சா அலியாஸ் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்