காணாமல் போகும் அடையாள அட்டைக்கு பதிலாக புதிய அடையாள அட்டையைப் பெறுவதற்கான அபராதம் அதிகரிக்கப்பட்டிருப்பது குறித்து பல தரப் பினரிடையே அதிருப்தி நிலவி வருகிறது. மக்களுக்கு மேலும் சுமையை ஏற்படுத்தும் வகையில் அபராதம் அதிகப்படியாக உயர்த்தப்பட்டிருப்பதை பலர் சாடி வருகின்றனர். இந்நிலையில், மக்களிடையே விழிப்புணர்வை அதிகரிக்கச் செய்ய அரசாங்கம் மேற்கொண்டிருக்கும் புதிய அணுகுமுறைதான் இது என உள்துறை துணை அமைச்சர் டத்தோ நோர் ஜஸ்லான் முகமட் கருத்துரைத்தார். அபராதம் உயர்த்தப்பட்டிருப்பது குறித்து பல தரப்பு அதிருப்தி தெரிவித்திருக்கும் நிலையில், அவர் மேலவையில் இது தொடர்பில் விளக்கம் அளித்துள்ளார். முக்கிய ஆவணங்களை பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டிய கட்டொழுங்கை மலேசியரிடையே ஊக்குவிக்க அபராதம் அதிகரிக்கப்பட்டிருப்ப தாக அவர் சொன்னார். அலட் சியத்தினால் அடையாள அட் டையை தொலைத்தவர்களுக்கு முதல் கட்டமாக வெ.100 அபராதம் விதிக்கப்படுகிறது. இரண்டாம் முறை அத்தவறு நேர்ந்தால் இதற்கு முன் வெ.200 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்ட வேளையில், தற்போது அது வெ.300-ஆக உயர்த்தப் பட் டுள்ளது. மூன்றாவது முறை அல்லது அதற்கு மேல் அடையாள அட் டையைத் தொலைப்ப வர்களுக்கு இதற்கு முன் 300 வெள்ளி அபராதம் விதிக்கப் பட்ட நிலை யில், அண்மை யில் அது ஆயிரம் வெள்ளியாக உயர்த்தப்பட்டது. இது மிகவும் அதிகம் எனவும் பெரும் சுமையை ஏற்படுத்துவதாக வும் மக்கள் குமுறத் தொடங்கியுள்ளனர். மக்களின் வாழ்க்கைச் செல வின சுமையில் மேலும் சிரமத்தை ஏற்படுத்தும் வகையில் இது அமைந்திருப்ப தாக பல தரப்பு கருதுகிறது. மற்றுமொரு நிலவரத்தில், குடியுரிமையைக் கொண்டிராத சிறார்கள் விவகாரத்திற்கு தீர்வு காணும் சிறந்த அணுகு முறையை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாக ஜஸ்லான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்