மக்களின் மகத்தான ஆதரவை பெற்றுள்ள டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினருக்கு 3 நாடாளுமன்ற, 6 சட்டமன்ற தொகுதிகளை தேசிய முன்னணி ஒதுக்க வேண்டும் என்று ஏ.கே. இராமலிங்கம் நேற்று வலியுறுத்தினார். சுப்பிரமணியம் தரப்பினர் மீது நாங்கள் தொடுத்திருந்த வழக்கு தற்போது விசாரணையில் இருந்து வருகிறது. கணேஸ், சத்தியமூர்த்தி, ஜோர்ஜ், சிதம்பரம் ஆகிய நால்வரும் வழக்கில் இருந்து விலகிய போதும் அவ்வழக்கை கைவிட வேண்டிய எண்ணத்தில் நாங் கள் இல்லை.இவ்வழக்கிற்கு உரிய நீதி கிடைக்கும் வரையில் போராட்டத்தை தொடர வேண்டும் என்பது தான் எங்களின் முதன்மை நோக்கமாக உள்ளது. வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் இருப்பதால் நாங்கள் அனைவரும் மஇகாவின் உறுப்பினர்கள் தான். எங்களை நீக்குவதற்கும், ஒதுக்குவதற்கும் எந்தவொரு தனிநபருக்கும் உரிமையில்லை. நாட்டில் மிக விரைவில் 14ஆவது பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. காலங்காலமாய் தேசிய முன்ன ணியின் வெற்றிக்காக தான் நாங்கள் அனைவரும் பாடுபட்டு வருகிறோம். இம்முறையில் தேசிய முன்னணியின் வெற்றிக்காகவே நாங்கள் உழைக்கவுள்ளோம். அதே வேளையில் மஇகாவை காப்பாற்ற வேண்டிய கட்டாயத் திலும் நாங்கள் இருக்கிறோம். டத்தோஸ்ரீ சுப்பிரமணியம் எங்களை ஒதுக்கினாலும் தேசிய முன்னணி, மஇகாவின் வெற்றி எங்களுக்கு மிக முக்கியமாக விளங்குகிறது. அவ்வகையில் தேசிய முன்னணியின் ஆதரவுடன் 3 நாடாளுமன்றம், 6 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் திட்டமிட்டுள்ளனர். கேமரன்மலை, சுங்கை சிப்புட், தெலுக் கெமாங் ஆகிய நாடாளுமன்ற தொகுதிகள், கஹாங் ஜொகூர், புக்கிட் செலம்பாவ், பாகான் டாலாம், ஊத்தான் மெலிந்தாங், ஈஜோங், காடெக் மலாக்கா ஆகிய சட்டமன்ற தொகுதிகளை நாங்கள் தேர்வு செய்துள்ளோம். இத்தொகுதிகளை கோரும் வகையில் தேசிய முன்னணித் தலைவர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தலைமை செயலாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் ஆகியோரிடம் மகஜர் ஒன்றையும் வழங்கியுள்ளோம். எங்களின் மகஜரை கருத்தில் கொண்டு இத்தொகுதிகளை தேசிய முன்னணி டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பினர் ஒதுக்கித் தர முன்வர வேண்டும். இத்தொகுதிகள் எங்களுக்கு வழங்கப்பட்டால் தேசிய முன்னணிக்காக எங்களின் சேவைகள் தொடரும் என்று ஏகே இராமலிங்கம் கூறினார். இதனிடையே பொதுத் தேர்தலில் போட்டியிட்டு 2, 3 முறை தோல்வி கண்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் டத்தோஸ்ரீ சுப்ராவின் வியூகம் இத்தேர்தலில் எடுப்படாது. அதே வேளையில் சுப்பிரமணியம் தரப்பினரைக் காட்டிலும் பழனி தரப்பினருக்கே மக்களின் ஆதரவு உள்ளது. கட்சியில் அடிமட்ட தொண்டர்களும் பழனிக்கு தான் தொடர் ஆதரவுகளை வழங்கி வருகின்றனர். ஆகவே எங்களின் கோரிக்கையை தேசிய முன்னணி கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கே.பி. சாமி செய்தியாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்