சர்ச்சைக்குரிய சமயப் போதகர் ஸாஹிர் நாயக்கிற்கு எதிராக இந்திய நீதிமன்றம் இரண்டாவது கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது. அவர் ஜாமினில் வெளிவர முடியாத அளவிற்கு மும்பை சிறப்பு நீதிமன்றம் இந்த கைது ஆணையைப் பிறப்பித்துள்ளதாக தி இந்தியா எக்ஸ்பிரஸ் பத்திரிகை கூறுகிறது. ஸாஹிர் நாயக் தீவிரவாத அமைப்புடன் கொண்டுள்ள தொடர்பு, பண சலவை விவகாரத்தில் சம்பந்தப்பட்டு இருப்பது ஆகிய குற்றச்சாட்டு களின் அடிப் படையில் அவரை கைது செய்வதற்கு இந்த ஆணைப்பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தேசிய புலனாய்வு ஏஜென்ஸி இந்த உத்தரவை பெற்றுள்ளதாக அந்தப் பத்திரிகை கூறுகிறது. இதற்கு முன்பு கடந்த வாரம் இந்தியாவின் மற்றொரு சிறப்பு நீதிமன்றம் ஸாஹிர் நாயக்கை கைது செய்வதற்கு ஆணை ஒன்றை பிறப்பித்து இருந்தது. அவர் பண சலவை மோசடியில் சம்பந்தப் பட்டுள்ளதாகக் கூறி அவரை கைது செய்வதற்கு இந்தியாவின் சிறப்பு அமலாக்கப் பிரிவு செய்து கொண்ட விண்ணப்பத்திற்கு அனுமதிஅளித்து இருந்தது. எனினும் அவர் ஒரு வார காலகட்டத்திற்குள் சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியுள்ளார். எனவே மற்றொரு சிறப்பு நீதிமன்றம் அவருக்கு ஜாமின் அனுமதிக்கப்படாத கடும் கைது ஆணையைப் பிறப்பித்துள்ளது. தாம் கைது செய்யப்படுவதை தவிர்க்கவே ஸாஹிர் நாயக் தற்போது வெளிநாட்டில் மறைந்து இருப்பதாக மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி வி.வி. பட்டீலிடம் கடந்த வியாழக்கிழமை இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்ஸி நீதிமன்றத் திடம் தெரிவித்தது. ஸாஹிர் நாயக் தற்போது மலேசியாவில் உள்ளார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அவருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை மலேசிய அரசு வழங் கியுள்ளது. பல்லின இனங்களுக்கு இடையிலரான, சமயத்தவர்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையில் ஸாஹிர் நாயக்கின் சொற்பொழிவுகள், பேருரைகள் அமைந்து இருப்பதாக இந்திய தேசிய புலனாய்வு ஏஜென்ஸி தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்