மலேசியாவில் பிறந்து வளர்ந்த தனக்கு குடியுரிமை நிராகரிக்கப்பட்டு வரும் அதே சமயம், ஸாஹிர் நாயக் போன்ற அந்நிய நாட்டினருக்கு நிரந்தர குடி யிருப்பாளர் அந்தஸ்து சர்வ சாதாரணமாகக் கிடைப் பது குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ளார் சந்திரா மொண்டீரோ. ஸாஹிருக்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது அநியாயம் என்று அவர் வர்ணித்தார். நான் பல முறை விண்ணப்பம் போட்டும் குடியுரிமை வழங்கப்படாமல் நிராகரிக்கப்பட்டேன். ஆனால், ஸாஹிருக்கும் மற்ற வங்காள தேச, இந்தோ னேசிய பிரஜைகளுக்கும் நிரந்தர குடியிருப்பாளர் அந்தஸ்து எளிதில் கிடைத்து விடுகிறது என்று அவர் குறைப்பட்டுக்கொண்டார்.சந்திரா தற்போது பெட் டாலிங் ஜெயாவில் வாழ்ந்து வருகிறார். தன்னை தத்தெடுத்த விவகாரத்தில் போதுமான ஆவணங்கள் இல்லாததால் குடியுரிமைக்கான தனது விண் ணப்பம் நிராகரிக்கப்பட்டது என்று அவர் சொன்னார். பதிவு இலாகா எனது விண்ணப்பத்தை நிராகரித்தது. காரணம், என்னை தத்தெடுத்த முறை சரியில்லை என்று அவர்கள் கூறினார்கள். நான் 21 வயதை அடைவதற்கு முன்பே நான் தத்தெடுக்கப்படவில்லை என்பது அவர்களின் வாதம். ஆனால், உண்மையில் நான் பிறந்தவுடனேயே என் பெற்றோர் என்னை தத்தெடுத்துக்கொண்டனர். ஆனால் எனக்கு இப்போதுதான் அவர்கள் பிறப்புப் பத்திரத்தை எடுத்தார்கள். நான் தத்தெடுக்கப்பட்டேன் என்பதைக் காட்டுவதற்கு தேவையான ஆவ ணங்கள் என்ன என்பது பற்றி அவர்களுக்கு எதுவும் தெரியவில்லை. நான் தத்தெடுக்கப்பட்டதற்கான குறிப்புகள் எதுவும் பிறப்புப் பத்திரத்தில் இல்லை. குடியுரிமை பெறுவதற்கு சந்திரா பல முயற்சிகளை மேற்கொண்டார். ஆனால், குடியுரிமை கிடைக்கவில்லை. ஆனாலும், குடும்பம் மற்றும் நண்பர்களின் ஆதரவு இருப்பதால் தான் ஓர் அதிர்ஷ்டசாலி என்றே கருதுவதாக அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்