இடைநிலைப்பள்ளியின் முன் மோட்டார் சைக்கிள்களைக் கொண்டு அராஜகம் புரிந்ததாக நம்பப்படும் 18 பேரை போலீஸ் சிறப்புக் குழு நேற்று கைது செய்துள்ளது. போலீசார் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் கைது செய்யப்பட்ட இந்த 18 பேரில் 13 பேர் மாணவர்கள் என்றும் 5 பேர் பள்ளி யிலிருந்து நிறுத்தப்பட்டவர்கள் என்றும் போலீஸ் தரப்பு கூறியது. கிள்ளான், ஸ்ரீ அண்டலாஸ் இடைநிலைப்பள்ளியின்முன் ‘24’ குண்டர் கும்பல் என்று எழுதப்பட்ட பதாகைகளைப் பிடித்துக் கொண்டு மோட்டார் சைக்கிள் களில் அராஜகம் செய்த இந்த கும்பலின் காணொளி ஒன்று சமூக வலைதளங்களில் பரவியதைத் தொடர்ந்து போலீசார் அவர்களைக் கைது செய்தனர். பள்ளிக்கு முன் இந்த தகாத செயலைப் புரிந்த நபர்களை கிள்ளான் சுற்று வட்டாரத்தில் போலீசார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து ‘24’ குண்டர் கும்பலைச் சேர்ந்த இன்னும் பலரைப் போலீசார் கைது செய்வர் என்று போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபுபாக்கார் நேற்று எச்சரித்துள்ளார். பள்ளி மாணவர்களைக் குண்டர் கும்பல் உறுப்பினர்களாக சேர்த்துக்கொள்ளப்படுவதை தடுக்க போலீஸ் இன்னும் பல முயற்சிகளையும் எடுக்கும் என்று அவர் சொன்னார். நேற்று முன்தினம் இரண்டு வீடியோ கிளிப்புகள் சமூகத் தளங்களில் பரவலாக பரவி வந்துள்ளது. அதில் ஒன்றில், தமிழ்த் திரைப்படங் களில் வருவதைப் போல சில இளைஞர்கள், மோட்டார் சைக்கிகளில் சவாரி செய்து கொண்டு குண்டர் கும்பல் பதாகைகளை ஏந்திக்கொண்டு பள்ளிமுன் சத்தமிட்டவாறு சுற்றி வந்துள்ளனர். அனைவருமே தலைக்கவசம் அணிந்து இருந்தனர். சுமார் 45 நிமிடம் ஓடக்கூடிய அந்த வீடியோ கிளிப்பில் உள்ள பெரும்பாலோர் இந்திய இளைஞர்கள் ஆவர். இன்னும் சிலர் பட்டாசுகளை சங்கிலித் தொடரைப் போல தரையில் வைத்து வெடி சத்தத்தை உண்டாக்கியுள்ளனர். காதுகளை மூடிக்கொள்ளும் அள விற்கு இதன் பயங்கரச் சத்தம் பள்ளியையே அதிரவைத்துள்ளது. பள்ளி வெளிவளாகமே புகை மண்டலத்தினால் சூழ்ந்திருந்தது. மற்றொரு வீடியோ கிளிப்பிலும் சம்பந்தப்பட்ட இளைஞர்கள் பள்ளியின் முன் அதே போன்ற அராஜகத்தை புரிந்துள்ளனர். பள்ளி நேரத்தில் நடந்த இந்த சம்பவத்தினால் மாண வர்கள் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் வெளியே நின்று வேடிக்கை பார்க்கத் தொடங்கியுள்ளனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக நம்பப்படும் மேலும் பலர் கைது செய்யப்படக்கூடிய சாத்தியம் இருப்பதை காலிட் அபுபக்கார் உறுதிப்படுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்