சமய போதகர் ஸாஹிர் நாயக் என்ற தனிநபரின் நலனைப் பார்க்காதீர்கள். இந்த நாட்டில் இன்னமும் குடியுரிமை இல்லாமல் நாடற்றவர்களாக இருக்கும் மலேசிய இந்தியர்களுக்கு குடியுரிமை வழங்குவதில் முன்னுரிமை காட்டுங்கள் என்று மஇகா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சி.சிவராஜ் வலி யுறுத்தினார். ஸாஹிட் என்ற தனிநபருக்கு நிரந்தர குடியிருப்பு அந்தஸ்தை வழங்குவதைக் காட்டிலும் இன்னமும் குடியுரிமை கிடைக்காமல் நாடற்றவர்களாக இருக் கும் மலேசிய இந்தியர்களுக்கு முன்னுரிமையை அரசாங்கம் அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். நேற்று முன்தினம் இரவு இங்கு புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெற்ற ‘திஎன்50’ எனும் இளையோர்களுக்கான கருத்தரங்கில் ஸாஹிர் நாயக்கிற்கு மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது குறித்து இளையோர்கள் கடுமையாக கேள்வி எழுப்பினர். அதன் தொடர்பில் டத்தோ சிவராஜ் நேற்று வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். இந்து சமயத்தை பற்றி மிக மோசமாக விமர் சனம் செய்யும் நபரான ஸாஹிருக்கு மலேசியாவின் நிரந்தர குடியிருப்பு அந்தஸ்து வழங்கப்பட்டுள்ளது குறித்து சிவராஜ் கேள்வி எழுப்பியதுடன் தனது அதிருப்தியையும் வெளிப்படுத்தினார். நாடற்றவர்களாகவும் இன்னமும் சிவப்பு அடையாளக்கார்டையும் கொண்டிருக்கும் இந்தியர்களின் நாடற்ற பிரச்சினைக்கு அரசாங்கம் முற்போக்கான செயல்பாட்டுடன் இவ்விவகாரத்திற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்பதையும் சிவராஜ் வலியுறுத்தினார். தீவிரவாத செயலுக்காக இந்தியாவி னால் தேடப்பட்டு வரும் முக்கிய நபர்களில் ஒருவரான ஸாஹிரை மலேசியாவை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்றும் சிவராஜ் வலியுறுத் தினார். ஸாஹிரின் நலனை விட மலேசியாவின் தேசிய நலனுக்குத்தான் அரசாங்கம் அதீத முக்கியத்துவத்தையும் முன்னுரிமையையும் வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்