(தஞ்சோங் மாலிம்) நேற்று முன்தினம் நடை பெற்ற தேசிய உருமாற்றுத் திட்டம் 2050 கலந்துரை யாடலில் இந்திய இளைஞர் கள் கலந்து கொண்ட நிகழ் வில் மஇகா தேசிய தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிர மணியத்திடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பிரச்சினைக்குரிய இந்திய மதபோதகர் ஸாஹிர் நாயக் கிற்கு இந்த நாட்டில் இடமில்லை என கூறியிருந்தார். ஸாஹிர் நாயக்கின் வருகையால் இஸ்லாம் மதத்திற்கு எந்தவொரு மேம்பாடும் நிகழப் போவதில்லை எனவும் கூறியிருந்த அவரின் பதில் ஸாஹிரின் நிரந்தரக் குடிவாசி தகுதிக்கு அவரோ, ம.இ. காவோ அல்லது அரசாங்கமோ எந்தவொரு மாற்றத்தைக் கொண்டுவரப் போவதில்லை எனக் கூறினார். இங்குள்ள மக்களும் இந்திய சமூகத்தினரும் எதிர்பார்ப்பதெல்லாம் அரசாங்கம் ஸாஹிருக்கு வழங்கப்பட்ட நிரந்தரவாசி தகுதியை நீக்குகிறதா அல்லது மறுபரி சீலனை செய்ய விருக்கிறதா என்பதற்கான பதிலே அன்றி விளக்கங்கள் அல்ல என குலசேகரன் தெளிவு படுத்தினார். சுப்பிரமணியத்திடம் நான் கேட்க விரும்புவதெல்லாம், நாட்டில் ஆயிரக் கணக்கான இந்தியர்கள் குடியுரிமைக்காக போராடிக் கொண்டிருக்கும் வேளை யில், ஸாஹிர் நாயக்கிற்கு அத்தகுதியை வழங்கியதன் அவசியம் என்ன என்பதாகும் என்றார். இப்பிரச்சினை குறித்து ம.இ.கா, பிரதமரிடமும், உள் துறை அமை ச்சரிடமும் தனது அதி ருப்தியை வெளிப் படுத்தியுள்ளதா என வினவினார். ஸாஹி ரின் நிரந்தர குடிவாசி தகுதியை நீக்கவேண்டும் என சுப்பிரமணியம் அமைச்சரவையில் கேள்வி எழுப்புவாரா என்றும் அவர் கேட்டார்.கடந்த ஏப்ரல் 15ஆம் தேதி, இந்திய அமலாக்க இயக்கம், ஸாஹிர் நாயக்கின் ஹார்மணி மீடி யா நிறுவனத்தின் மீதும் அவரது சகாவான அமீர் கஸ்டார் மீதும் பண மாற்றுதலில் முறைகேடு நடந்துள்ளதாக வழக்கு பதிவு செய்துள்ளது. ஸாஹிர் நாயக் வருகை நாட் டிற்கு எந்தவொரு சுபிட்சத்தையும் கொண்டு வரப்போவதில்லை என சரவா மாநில தலைவர்கள் குறிப்பிட்டதை குலா வரவேற்றதோடு பாஸ் கட்சியின் தனிநபர் மசோதாவு க்கு எதிர்ப்பு தெரிவித்த முன்னாள் சரவா முதலமைசரின் வீரத்தை ம.இ.கா தேசிய பொருளாளர் டத்தோஸ்ரீ வேள்பாரி பாராட்டியுள்ளதையும் அவர் நினைவு கூர்ந்தார். சரவா தலைவர்கள் போன்று ம.இ.கா தலை வர்களும் அமைச்சர வையில் இவ் விவகாரத்திற்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என குலசேகரன் வலியுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்