சமுதாயப் பிரச்சினைகளை துணிச்சலாக முன்னெடுத்து வரும் மலேசிய நண்பனுடன் நேருக்கு நேர் நின்று போட்டியிட முடியாதவர்கள், வக்கற்ற வேலையை செய்து வருவது அவர்களின் நரித்தனத்தை காட்டுகிறது என்று பூச்சோங் முரளி தடாலடியாக கூறினார். இந்திய சமுதாயம் கடந்த 60 ஆண்டுகாலமாக பல்வேறு உரிமைகளையும் சலுகைகளையும் இழந்துள்ள வேளையில் அவற்றை மீட்டெடுக்கும் வகையில் ஒவ்வொரு நாளும் தமிழ்ப்பள்ளி பிரச்சினைகள், இந்தியர்களின் வீட்டுப்பிரச்சினைகள், உரிமைப் போராட்டங்கள் என்று பல ரூபங்களில் சமுதாயப்பிரச்சினைகளை முன்னெடுத்துவரும் முதல் நிலை பத்திரிகை என்ற முறையில் மலேசிய நண்பனின் வளர்ச்சியையும், அது செல்கின்ற பாதையையும், அது பெற்று வருகின்ற வாசகர்களின் எண்ணிக்கையையும் ஜீரணிக்க முடியாதவர்கள் கொல்லைப்புறமாக அதனை ஒடுக்க முயற்சிப்பது அவர்களின் இயலாமையையும் கையாலாகாத்தனத்தையும் காட்டுகிறது என்று முரளி கூறினார். எந்தவொரு தொழிலும் போட்டிகள் நிரம்பியது தான் அந்த போட்டியை சமாளிக்கும் ஆற்றலை பெற்று நாடு முழுவதும் எண்ணற்ற வாசகர்களை கொண்டு இருக்கும் மலேசிய நண்பனை ஒழித்து விட வேண்டும் என்ற வேட்கையில் மனப்பால் குடித்துக் கொண்டு இருப்பவர்களின் எண்ணங்கள் நிச் சயம் ஈடேறாது. காரணம் மலேசிய நண்பனின் சமுதாயப்போராட்டமே உண்மையை முன் நிறுத்தி தான்மேற்கொள்ளப்படுகிறது. வக்கற்றவர்கள், அத னுடன் மோதுவதற்கு திறமையில்லையென்றால் அதன் வெற்றியின் வழிவகைகளை கற்றுக் கொள்ள முற்பட வேண்டுமே தவிர விஷமத்தனமான பிரச் சாரங்கள் போன்ற பேடித்தனமான காரியங்களில் ஒரு போதும் ஈடுபடக்கூடாது என்று முரளி எச்சரித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்