பகாங் மாநிலத்தின், லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளிக்கான புதிய பள்ளியின் கட்டுமானம் வெ.7.06 மில்லியன் தொகையில் முழுமையாகப் பூர்த்திய டைந்திருந்தாலும் கடந்த இரண்டு ஆண்டுகளாக வெ.300,000ஐ உட்படுத்திய சாலை நிர்மாணிப்புப் பணிகளுக்கு மட்டும் முட்டுக் கட்டையாகவும், தடங் கலாகவும் இருந்து வரும் விவகாரத்தினைத் தீர்ப்பதற்கு மலேசியக் கல்வி அமைச்சுக்கு நேரமே இல்லை என்பதாகவே நண்பன் குழு கருதுகின்றது. மலேசிய இந்தியர்களின் உரிமைகள் அனைத்தையும் இழந்து கொண்டிருக்கும் நமது சமூகத்தில் எவ்விதமான பாவத்தையும் அறியாத லஞ்சாங் தோட் டத் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் தேவைகளையும் சுயநல நோக்கத்தோடு தள்ளிப் போட்டு வரும் நடவடிக்கைகள் நியாயமானதா என்பதை மலேசிய இந் தியர்களிடம் விளக்க வேண்டிய பொறுப்பு மலேசியத் துணைக்கல்வியமைச்சர் டத்தோ ப.கமலநாதனுக்கு இருப்பதாகவே நண்பன் குழு கருது கின்றது. 10.4.2017ஆம் தேதியிடப்பட்ட Bil (10) dlm.MPT 4/2/1/2016-35 (km 204 D) என்ற குறிப்பினைக் கொண்ட கடிதத்தின் வழி தெமர்லோ மாவட்ட மன்றம் (Majlis Perbandaran Temerloh - MPT) லஞ்சாங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் குத்தகையாளர் நிறுவனமான பெர்காமோ மலேசியா சென். பெர்ஹாட் (Bergamo (M) Sdn. Bhd.) நிறுவனத்திற்கு வழங்கியுள்ள கடிதத்தின்வழி பள்ளி மேலாளர் வாரியமும் மலேசியக் கல்வியமைச்சால் நியமனம் செய்யப் பட்ட திட்ட மேலாண்மை நிறுவனமான இசிஎல் மேனேஜ்மென்ட் (ECL Management) நிறுவனமும் சாலையை நிர்மாணிக்காமலேயே பள்ளிக்கான அனு மதிக் கடிதத்திற்கான கோரிக்கையை நிராகரிப்பதாகக் கூறியதோடு மீண்டும் பள்ளிக்கான சாலையினை நிர்மாணித்தால் மட்டுமே தகுதிச் சான்றிதழ் வழங்கப்படும் எனக் கேட்டுக் கொண்டுள்ளதை ஏன் இன்றுவரை; * மலேசியக் கல்வியமைச்சின் துணைக்கல்வியமைச்சர் * பள்ளி மேலாளர் வாரியம் * கட்டுமான திட்ட மேலாண்மை நிறுவனம் * பெற்றோர் ஆசிரியர் சங்கம் குத்தகையாளருக்கான கட்டுமானத் தொகையான வெ.300,000ஐ வழங்கி சாலையினை நிறைவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படவில்லை என்பதற் கான விளக்கத்தினை நண்பன் குழு கோருகின்றது. வெ.450,000ஐ மானியமாகப் பெற்றிருக்கும் பள்ளி மேலாளர் வாரியம் ஏன் வெ.300,000ஐ கொடுப்பதற்குத் தயங்குகின்றது? இவ்விவகாரத்தில் பாதிக்கப் பட்ட மாணவர்களின் கல்வியைவிட குறிப்பிட்டவர்களின் பணத் தேவையே மூலமாக உள்ளதா என்ற கேள்விக்கு விளக்கம் கிடைக்குமா? மஇகாவின் அர சியல் நரித்தனங்களால் பலியாகும் மாணவர்களின் தலையெழுத்து மாறுமா?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்