மலேசிய நண்பனுக்கு எதிராக விஷமத்தனமான பிரச்சாரங்களைச் செய்து, அதன் குரல் வளையை நெரிக்க எந்தவொரு தரப்பும் முயற்சிக்கக் கூடாது. அவ்வாறு செய்வது தமிழுக்கு மட்டுமல்ல, சமுதாயத்திற்கே செய்யும் பெரும் துரோகமாகும் என்று சமூக சேவையாளர் ஏ.கே.இராமலிங்கம் கண்டித் துள்ளார். கடந்த சில தினங்களாக புலனம் மற்றும் முகநூலின்வழி மலேசிய நண்பனுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் அவதூறு பிரச்சாரங்கள் கண் டனத்திற்குரியதாகும். பத்திரிகை என்பது சமுதாயத்தின் கண்ணாடியாகும். சமுதாயப் பிரச்சினைகளை கண்ணாடி போல் பிரதிபலிப்பதும் சமுதா யத் திற்கு கொண்டு செல்வதும் பத்திரிகைதான். சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய கடமைகளை செய்யத் தவறும்போதும் தட்டிப் பெற வேண்டிய உரிமை களை தவறவிடும்போதும் அவற்றை சமுதாய நாதமாக குரலாக மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் உரிமைக் குரலை எழுப்புவதிலும் மலேசிய நண்பன் பிரதான பங்களிப்பை வழங்கி வருவதை மனசாட்சியுள் ளவர்கள் அறிவார்கள். அப்படிப்பட்ட மலேசிய நண்பனை கீழறுப்பு செய்யும் நோக்கில் மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட்டு அவதூறு பிரச்சாரங்களை வாட்ஸ் ஆப் மூலம் பரப்பிவரும் கும்பல்கள் தங்களின் சுயநலத்திற்காக இத்தகைய கீழறுப்பு வேலையை செய்து வருகின்றன என்பது வெள்ளிடை மலை யாகும். இதுவரையில் சமுதாயம் இழந்தது போதும். இனி எதனையும் இழக்கக் கூடாது என்பதற்காகவே சமுதாயப் பிரச்சினைகளை முன்னெடுத்து வரும் மலே சிய நண்பன் தொடர்ந்து துணிச்சலாக தனது நெஞ்சுரமிக்க கருத்தை சமுதாயத்திற்கு கொண்டு சேர்த்து, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அதன் சமுதாயப் போராட்டம் தொடர்வதற்கு இந்தியர்கள் எப்போதுமே துணை நிற்பர் என்று இராமலிங்கம் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்