கடந்த 3 நாட்களாக மலேசிய நண்பனுக்கு எதிராக வாட்ஸ்அப்பிலும், முகநூலிலும் விஷமப் பிரச்சாரம் செய்து வரும் கும்பலுக்கு எதிராக போலீசார் தீவிர விசாரணையை மேற்கொள்வர் என்று செந்தூல் மாவட்ட காவல் துறை தலைவர் ஏசிபி முனுசாமி நேற்று உறுதி கூறினார். மலேசிய நண்பனுக்கு எதிராக விஷமப்பிரச்சாரம் செய்து வரும் நபர்களுக்கு எதிராக நேற்று செந்தூல் காவல் நிலையத்தில் மலேசிய நண்பன் நிர்வாகி எம்.பிரகாஷ் புகார் செய்தார். அவருடன் மலேசிய நண்பன் ஆசிரியர் இ.எம்.சாமி, துணை ஆசிரியர் கு.ச.இராமசாமி, பொது உறவு அதிகாரி சூரிய குமார், நிருபர் அஸ்மி ஆகியோரும் உடன் இருந்தனர். புகாரை பெற்றுக் கொண்ட ஏசிபி முனுசாமி விஷமத்தனமான பிரச்சாரம் செய்யும் நபர்கள் மதத்தை கருவியாக வைத்துக் கொண்டு பத்திரிகைக்கு எதிராக பிரச்சாரம் செய்வது கண்டிக்கத்தக்கது என்றார். இனங்களுக்கு இடையிலான மத நல்லிணக்கத்தை சீர் குலைப்பதற்கு முற்படுவோர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது சட்டம் பாயும் என்றும் அவர் எச்சரித்தார். வாட்சாப்பிலும் முகநூலிலும் அடையாளம் தெரியாத நபர்கள் விஷமப்பிரச்சாரம் செய்வது அண்மைய காலமாக பெருகி வருகிறது. சுய நலத் தேவைக் காக மதத்தை மையமாக வைத்து அவதூறு பிரச்சாரங்கள் செய்து வந்தவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதை ஏசிபி முனு சாமி நினைவு கூர்ந்தார். இதனால் பலர் மன உளைச்சலுக்கும் வேதனைக்கும் ஆளாகின்றனர். இப்போது மலேசிய நண்பனுக்கு எதிராக சில விஷமிகள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக தாங்கள் கடுமையான புலன் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை மேற்கொள்வோம் என்று ஏசிபி முனுசாமி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்