இந்நாட்டு முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாத மற்ற சமயத்தினரை சமமாக மதிக்க வேண்டும் என ஜொகூர் சுல்தானா ராஜா ஸாரித் சோபியா சுல்தான் இட்ரிஸ் ஷா அறிவுறுத்தியுள்ளார். சிறுபான்மையினர் என்றால் உணர்வு எப்படி இருக்கும் என்பதை வெளிநாட்டில் படித்துள்ள அல்லது அங்கு வாழ்ந் துள்ள முஸ்லிம்கள் நன்குணர்ந் திருப்பார்கள். வெளிநாடுகளில் இருக்கும்போது அனுசரித்து வாழ நாம் கற்றுக்கொள்கிறோம். அதே சமயம், கிறிஸ்துவர்களாகவும் யூதர்களாகவும், மற்ற சமய நம்பிக்கை உடையவர்களாகவும் இருக்கும் மற்ற சமயத்தினரை நாம் ஏற்றுக்கொள்கிறோம் என்று தனது முகநூல் பதிவேற்றத்தில் சுல்தானா ராஜா ஸாரித் கூறியுள்ளார். நியூ ஸ்ட்ரெய்ட் டைம்ஸ் நாளிதழின் லண்டன் நிருபர் ஸாஹாரா ஒஸ்மான், அங்குள்ள தேவாலயத்தில் ஹிஜாப் அணிந்த வண்ணம் காட்சி தரும் நிழற்படம் குறித்து அவர் தனது கருத்துக்களை வெளிப்படுத்தினார்.தேவாலயங்களில் தனது தொழுகையை மேற்கொள்ள தனக்கு வாய்ப்பளிக்கப்பட்டது பற்றி அவர் என்னிடம் கூறியிருக்கிறார். அதே போல, தனது மூத்த மகன் இந்திய ராணுவத்துடன் தனது சேவையை முடித்துக்கொண்டு இந்தியாவை விட்டு வெளியேறும்போது, அவரது சக அதி காரிகள் ராணுவ பள்ளிவாசலுக்கு அவரை அழைத்துச்சென்றதையும் சுல்தானா நினைவு கூர்ந்தார். அவர்கள் இந்துக்கள். ஆனால், தங்கள் தலைக்கு முக்காடிட்டுக் கொள்வதாலும், காலணிகளை அகற்றி விட்டு பள்ளிவாசலுக்குள் நுழைவதாலும் அவர் கள் தங்கள் மரியாதையை வெளிப்படுத்தினர் என்றும் அவர் சொன்னார்.மலேசியாவில் உள்ள முஸ்லிம்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். காரணம், சிறு பான்மையினராக வாழ்வது என்றால் என்ன என்பது அவர்களுக்கு தெரியாது என்று அவர் மேலும் சொன்னார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்