காப்பார், பச்சை புத்தகத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிலங்களை அடிமாட்டு விலைக்கு விற்கும் காப்பார், கம்போங் பிரப்பாட் இந்திய விவசாயிகள் அரை நூற்றாண்டுக்கும் பழைமையான அத்திட்டத்தில் தங்களுடைய அடையாளத்தை இழந்து வருவதாக ஆய்வொன்று கூறுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட இந்தியர்கள் தங்களுடைய விளைநிலங்களை தனியார்களிடம் விற்றுவிட்டதாக அப்பகுதிக்கான கிள்ளான் நகராண்மைக் கழக உறுப்பினர் டத்தோ மணிவண்ணன் வேலு, தன்னுடைய ஆய்வில் தெரிவித்தார். இந்த அவலம் நீடிக்குமானால் அந்த பசுமை புரட்சித் திட்டத்தில் இந்தியர் களின் பாரம்பரியம் அழிந்து போய்விடும் என அவர் எச்சரித்தார். விவசாய நிலங்களை அடிமாட்டு விலைக்கு வாங்குவதாக நம்பப்படும் தனியார்கள் அவற்றில் தொழிற்சாலைகளை பெருமளவில் நிறுவிக்கொண்டிருப் பதாக அவர் கூறினார். இந்த சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு இந்தியர்கள் குறிப்பாக விவசாயிகள் துணைபோவது கவலையளிக்கின்றது என்று காப் பார் தொகுதி பிகேஆர் துணைத் தலைவருமான மணி வண்ணன் தெரிவித்தார். இந்த தொழிற்சாலைகளுக்கு கிள்ளான் நகராண்மைக் கழகத்தின் உரிமம் கிடையாது. விவசாய விலை நிலங்களை தொழிற்சாலை அல்லது தொழிற் பேட்டை தகுதிக்கு மாற்ற முடியாது. ஆனால், இதையும் மீறி விவசாய நிலங் களில் தொழிற் சாலைகள் அமைக் கும் தனியார்களுக்கு எதிராக கழகம், இனியும் விட்டுக் கொடுக்கும் போக்கை கடைபிடிக்காது என்று அவர் எச்சரித்தார். பச்சை புத்தகத் திட்டத்தின் கீழ் மஇகாவின் அப்போதைய தேசியத் தலைவரும் கோலக் கிள்ளான் நாடாளுமன்ற (தற்சமயம் காப்பார் நாடாளுமன்றம்) உறுப்பினருமான மறைந்த டான்ஸ்ரீ வெ.மாணிக்க வாசகம், நூற்றுக்கணக்கான ஏழை இந்தியர்களுக்கு நிலங்களை வழங்கினார். சுற்று வட்டார தோட்டத் தொழிலாளர்களுக்கும் இதில் அப்போது அவர் வாய்ப்பு அளித்தார். பின்னாட்களில் இந்தியர்கள் இங்கு நிலங்களை சுயமாகவும் வாங்கிக் கொண்டனர். அரசாங்கம் அப்போது விவ சாயத்திற்கென்று இந்தியர்களுக்கு தலா மூன்று ஏக்கர் பரப்பளவிலான நிலம் வழங்கியதாக தெரியவருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்