மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு தீர்க்கமான விடியலைச் காண்பதற்காக பரிந்துரைக்கப்பட்ட ஹிண்ட்ராப்பின் ஐந்தாண்டு செயல் வரைவுத் திட்டம் தோல்வியில் முடிந்ததற்கான காரணங்களை ஆய்விற்கு உட்படுத்தப்பட்ட பின்னரே பிரதமரின் நேரடியான தலையீட்டின் வழி ‘மலேசிய இந்தியர் செயல் வரைவுத் திட்டம் 2017’ (Malaysia Indian Blue Print - MIB) உருவாகி இருக்க வேண்டும் என்ற சிந்தனை நிஜமானதாக இருந்தால் நிச்சயமாக அதன் அமலாக்கத்தில் மலேசிய இந்தியர்களைப் பிரதிநிதிப்பதாகக் கூறிக் கொண்டிருக்கும் தாய்க்கட்சியான மஇகாவோடு அரசாங்க சார்பு உதிரிக்கட்சிகளின் தலையீடுகளும் முற்றாக நிராகரிக்கப்படுவதன் வழி பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இந்தியர்களுக்கான சமூகப் பொருளாதார இன்னல்களுக்கான பரிகார நடவடிக்கைகள் வெற்றி பெறுவதற்கான வாயப்புகள் ஏற்படலாம் என்றே ஏவுகணை கணிக்கின்றது. தேசிய முன்னணியும் ஹிண்ட்ராப்பும் செய்து கொண்ட மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார நலிவுகளுக்கான நிரந்தரமான தீர்விற்கான செயல் பாடுகள் ‘கைக்கு எட்டியது வாயிற்கு எட்டாத’ சூழலுக்கு பின்னணியாக இருந்தவர்கள் அனைவரும் அரசியல் தொடர்புடையவர்கள் என்பதை யாருமே இன்றுவரை மறுக்கவில்லை. எனவே பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் இரண்டாவது முயற்சியான ‘மலேசிய இந்தியர் செயல் வரைவுத் திட்டம் 2017’ வெறும் கண்துடைப்பு நாடகமாக அமைந்து விடாமல் இருக்க வேண்டுமென ஏவுகணை நலிவுற்றிருக்கும் மலேசிய இந்தியர்களின் சார்பில் கேட்டுக் கொள்கின்றது. தகுதி வாய்ந்த நிர்வாக முறை அமையுமா? கடந்த 60 ஆண்டுகளில் மலேசிய இந்திய சமூகத்தின் மேம்பாடுகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து வகையான உருமாற்றுத் திட்டங்களும் சரி யான பலனை ஏற்படுத்தாதற்கு பின்வரும் காரணங்களே பிரதானமாக இருந்ததை ஏவுகணை பட்டியலிடுகின்றது. * மஇகாவின் வழி கொடுக்கப்பட்ட மானியங்களும், வாய்ப்புகளும் இலக்கினைச் சென்றடையாமல் தடம் மாறிய அவலம். * மஇகாவின் பல்வேறு பிரிவுகள் குறிப்பாக கல்விக்குழு, சமயக்குழு, சமூகக்குழு, வர்த்தக மேம்பாட்டுக்குழு என ஏற் படுத்தப்பட்டாலும் செயல்பாடு களில் எதையுமே காண முடியாத அவலம். * மானியங்களின் பகிர்ந்தளிப்பு முறையில் காணப்பட்ட சேதாரங்கள். * மானியங்கள் அல்லது வாய்ப்புகளை அரசியல் நகர்விற்காகப் பயன்படுத்திய நரித்தனம். * அரசாங்க மானியங்களை ‘நெருக்கமானவர்களுக்கு’ வழங்கிய துயரம் என்பதோடு அரசாங்க சார்பு உதிரிக்கட்சிகள் வாங்கிய மானியத்தால் துளியளவு கூட மலேசிய இந்தியர்கள் பயன்பெற்றுள்ளனரா என்பதற்கான சான்றுகளை ஏவுகணை தேடிக் கொண்டிருக்கின்றது. ஆக மொத்தத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தின் பனவீனங்களைத் தெளிவாக உணர்ந்து கொண்டதால்தான் பிரதமர் துறை அமைச்சின் வழி (Jabatan Perdana Menteri - JPM) இந்தியர்களின் தேவைகளை நேரடியாகவும், அரசியல் தலையீடுகள் இல்லாமலும் செயலாற்றும் வகையில், * இந்தியர் சமூகப் பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைக்குழு (SEDIC) * தமிழ்ப்பள்ளிகளின் எதிர்கால மேம்பாட்டு நடவடிக் கைக்குழு (PTST) * இந்திய தொழில் முனைவர் மேம்பாட்டு சிறப்பு செயற்குழு (SEED) ஆகிய முக்கியமான மூன்று அமைப்புகளின் வழி நேரடியாகவே நலிவுற்றிருக்கும் மலேசிய இந்தியர்களைச் சென்றடையும் வகையிலான நடவடிக் கைகள் நாடு தழுவிய நிலையில் இந்தியர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளதாகவே ஏவுகணை கருதுகின்றது. எனவே வரும் 23.4.2017இல் பிரதமர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கும் ‘மலேசிய இந்தியர் செயல்வரைவுத் திட்டம் 2017’ 100 விழுக்காடு அர சியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் நேரடியாகவே அரசாங்க நிர்வாகத்தின்வழி செயல்படுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏவுகணை முன் வைக்கின்றது. விடியலை ஏற்படுத்துமா நிர்வாகக் குழு? மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு நிரந்தரமான, நியாயமான, நேர்மையான வகையில் தீர்வினைக் காண வேண்டும் என்ற வேட்கை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம் இருந்தால் அரசியல்வாதிகளை அரசியல் நடவடிக்கைகளை மட்டுமே பார்க்கும் வகையில் விட்டு விட்டு 100 விழுக்காடு செயல்வரைவுத் திட்டங்களைச் செயல்படுத்துவதற்கும் பிரதமர் துறையின் அதிகாரத்திற்கு உட்பட்ட நிர்வாகக் குழுவினையும் நிர்வாகப் பிரிவையும் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்பினை ஏவுகணை முன்மொழிகின்றது. அரசியல் நியமனத்திலான அதிகாரிகள் 23.4.2017இல் பிரதமர் அறிவிக்கவிருக்கும் ‘மலேசிய இந்தியர் செயல்வரைவு 2017’ (Malaysian Indian Blue Print - MIB) வார்த்தை ஜாலங்களாகவோ அல்லது தேர்தல்கால இனிப்புகளாகவோ இருந்து விடக்கூடாது என்பதை வலியுறுத்தும் அதேவேளையில் பிரதமரின் நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் சமூக உணர்விற்கும் பொருத்தமான ஒருவரை (அரசியலுக்கு அப்பாற்பட்டு) நிர்வாகக் குழுவின் இயக்குநராக நியமனம் செய்ய வேண்டும் என்பதை ஏவுகணை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகின்றது. அரசியல் ரீதியிலான எந்த ஒரு தலையீடும் கல்வி நிலையங்களின் போர்வையில் உள்ள தலையீடுகளும், அரசியல்வாதிகளுடன் தொடர்புடையவர் களின் தலையீடுகளும் தவிர்க்கப்பட்டால் மட்டுமே பிரதமரின் நியாயமான எதிர்பார்ப்பு வெற்றி பெறமுடியும் என்பதை ஏவுகணை கூற வேண்டி யதில்லை. பிரதமர் மனம் வைப்பாரா? 18.4.2013இல் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் மேற்கொண்ட செயலின்வழி சமூகப் பொருளாதார நிலையில் நலிவடைந்தவர்கள் ஆயிரக்கணக்கானோர் புதிய விடியல் ஏற்படும் என நம்பினர் என்பதை மறுக்கவே முடியாது. வாழை இரண்டு முறை குலைதள்ளிய சூழல் இந்திய சமூகத்திற்கு வேண்டாம் என்றே ஏவுகணை கருது கின்றது. அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மலேசிய இந்தியர்களின் தியாகத்திற்கு பரிகாரம் செய்வதைக் கடமை யாகக் கொண்ட பிரதமரின் அறிவிப்பு இருக் கும் என நம்பி ஏவுகணை விடை பெறுகின்றது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்