மனதிருப்திக்காகவும் கலை யார்வத்திற்காகவும் கற்றுக்கொள் ளப்படும் இசையை, நாம் நினைத்தால் வருமானம் பெறக் கூடிய துறையாகவும் மாற் றலாம் என ஆலோசனை கூறுகிறார், கிள்ளானைச் சேர்ந்த இசை கலைமணி வீணை பத்மினி. இந்தியாவில் வீணை கற்றதைத் தன்னோடு மட்டும் வைத்துக் கொண்டிராமல் இங்குள்ள மாணவர்களுக்கு வீணையோடு மிருதங்கம், வயலின் போன்ற இசைக் கருவிகளையும் வாசிக்கக் கற்றுக்கொடுத்து வருகிறார். இல்லத்தரசியாக இருந்தாலும் இறைவனால் தனக்கு அளிக்கப் பட்ட இந்தத் திறமை யைக் கொண்டே ஓர ளவிற்கு வருமா னத்தை ஈட்டி வருவதோடு அவ்வப்போது சேவையாகவும் செய்து வருகிறார். மலேசியாவில் சங்கீதம் மற்றும் இந்திய இசைக்கரு விகள் தொடர்பாகப் போதுமான ஆசிரியர்களும் பயிற்சியும் இல்லாத காரணத்தினால் இந்தியாவில் தமிழ்நாட்டு அரசு இசைக் கல்லூரியில் கல்வி கற்று இசை கலைமணி பட்ட த்தையும் பெற்றார். இசைக் கல்வியைக் குறித்த பயண த்தை அத்தோடு நிறுத்தி விடாமல் இசைத்துறையில் மெட்ராஸ் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட் டமும் பெற்று நாடு திரும்பினார். பிரத்தியேகமாக கலைமாமணி வீணை பிச்சுமணி ஐயர் மற்றும் ஸ்ரீமதி டாக்டர் ஆ.எஸ். ஜெயலட்சுமி ஆகியோரிடமும் வீணை கற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. பெற்ற திறமையையும் கற்ற இசைக் கல்வியையும் வைத்து முதலில் இல்லத்திலிருந்தே வீணை உட்பட இசை வகுப்பைத் தொடங்கினார். இன்று ஸ்ரீ பத் மினி வித்யாலயா என்ற பெயரில் மூன்று இசைப் பயிற்சி மையங்களைக் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வருகிறார். ஏறக்குறைய 100க்கும் அதிக மான மாணவர்கள் இவற்றில் சங்கீதம், வீணை, மிருதங்கம், வயலின், பரதம் ஆகியவற்றைக் கற்று வருகின்றனர். இன்றைய காலக் கட்டத்தில் பெற்றோர்களிடையே சிந்தனை மாற்றம் பெருமளவில் ஏற்பட்டு வருகிறது. பள்ளிக் கல்விற்கு அப்பாற்பட்ட நிலையில் தங் களுடைய பிள்ளைகளில் பிற விஷயங்களிலும் தனித்துவம் பெற்று விளங்க வேண்டும் என்பதற்காக இது போன்ற வகுப்புகளுக்கு அனுப்பத் தொடங்கியுள்ளனர். இதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்ன வென்றால், பெற்றோர்களில் சிலர் தங்களின் பிள்ளைகளுடன் இணைந்து இந்த வகுப்பில் பங் கேற்றுக் கற்று வருகின்றனர். குறி ப்பாக, இல்லத்தரசிகள் அதிக மானோர் இந்த வகுப்புகளில் கலந்துகொள்வதாக அவர் தெரிவித்தார். இதன் அடிப்படையில், தற் போது அவரிடம் 6 வயதிலிருந்து 60 வயது வரை யில் உள்ளவர்களுக்கு வீணை உட்பட இசைக் கருவிகளையும் சங்கீதத்தையும் கற்றுக்கொடுத்து வருகிறார். பிள்ளைகள் பெரியவர்களாகி வேலைக்குச் சென்றுவிடும் சூழ்நிலையில் மனத்திற்கு நிம் மதி பெற வேண்டி அதிகமான வயதானவர்கள் இங்கு வீணை கற்றுக்கொள்கின்றனர். இந்தியர்களைத் தவிர்த்து மலாய், சீன சமூகத்தைச் சேர்ந்த வர்களுக்கும் வீணை கற்றுக் கொடுத்த அனுபவம் உள்ளதா கவும் அது கூடுதல் சவால்மிக்க தாக இருந்ததாகவும் குறிப்பிடு கிறார் பத்மினி. இவரிடம் இசைக் கல்வி கற்ற மாணவர்கள் கொரியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் நடைபெறும் இசை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது. இருப்பினும், இவை எல்லாவற்றிக்கும் முத்தாய்ப்பாக, கடந்த 2013ஆம் ஆண் டில் வித்யாலயாவிலிருந்து 113 வீணை இசைக்கலைஞர்கள் ஒரே மேடையில் வீணை வாசித்து மலேசிய சாதனைப் புத்தகத்தில் முத்திரை பதித்தனர். இதில் 6 வயதிலிருந்து 60 வரையிலான இசைக்கலைஞர்கள் பங்கேற்று வீணை வாசித்தனர். இந்தச் சாத னையை இதுவரையில் யாராலும் முறியடிக் கப்படவில்லை. இசை வகுப்பிற்கு அடுத்து தமிழ்ப்பள்ளிகளில் மாணவர்களுக்குப் புறப்பாட நடவடிக்கைகாகவும் அவர் வீணை கற்றுக்கொடுத்துள்ளார். ஆதரவற்றோர் இல்லம் சார்பாக இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக்கொடுத்து வருமானத் திற்கு அப்பாற்பட்ட நிலையில் இசைச் சேவையையும் ஆற்றி வருகிறார் பத்மினி. வகுப்பிற்கு வரும் மாணவர்கள் ஏதோ சூழ்நிலை அல்லது பணப்பிரச்சினை காரணமாக வருவதை நிறுத்திக்கொண்டால், அவர்களிடம் கட்டணம் ஏதும் பெறாமல் அவர்களின் இசைக்கல்வியைத் தொடரவும் வழிவகுக்கிறார். மண்டலின் வாசிக்கும் மகள்: இவரைத் தொடர்ந்து இவரின் மகள் ஜய்ஷினியும் (19) இசைத்துறையில் சாதனை படைத்து வரத் தொடங்கியுள்ளார். தாயைப் போன்று வீணை வாசிப்பதில் வல்லமை பெற்றிருந்தாலும் தற்போது இவரின் கவனம் மண்டலின் என்னும் இசைக்கருவி வாசிப்பதில் சென் றுள்ளது. இது மலேசியாவில் பிரபலமாகாத இசைக்கருவியாகும். எனவே, இதைக் கற்றுக்கொண்டு, வாசிக்கும் முதல் இந்தியப் பெண் என்ற பெரு மையும் இவருக்கு உண்டு. மலேசியாவில் இதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு இல்லாததால் தாயைப் போன்று இந்தியாவிற்குச் சென்று ஸ்ரீமதி யு.பி.நாகமணி ராஜூ என்பவரிடம் கற்றுக்கொண்டார். இந்தியாவிலேயே இந்த இசைக்கருவியை வாசிக்கக் கூடியவர்கள் ஓரிருவரே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது சன்வே கல்லூரியில் கணக்கியல் துறையில் டிப்ளோமா கல்வி மேற்கொண்டு வருகிறார். இசைக்கல்வியும் ஒரு வாய்ப்பே!: உடல்பேறு குறைந்தவர்களுக்கு வீணை கற்றுக்கொடுக்கத் தான் விருப்பம் கொண்டுள்ளதாகவும் இதுவரையில் அதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட தரப்பினர்களை அணுகியும் இவ்வித உதவிகளைத் தாங்கள் எதிர்பார்க்கவில்லை எனக் கூறி மறுத்துவிடுவதாகவும் பத்மினி குறிப் பிட்டார். படிவம் ஐந்திற்குப் பிறகு தோல்வியடையும் மாணவர்கள் பெரும்பாலும் தொழிற்கல்வியைத்தான் வாய்ப்பாகக் கருதி அவற்றில் கல்வியைத் தொடர முனைகின்றனர். ஆனால், இசைத்துறையிலும் அத்தகைய வாய்ப்புகள் உள்ளன என்பதையும் நிறைவாகக் கற்றுவிட்ட பின்னர் அதிலிருந்து வருமானத்தைப் பெற முடியும் என்பதையும் மாணவர்களும் பெற்றோர்களும் உணர வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இசை கற்றுக்கொள்ள ஆர்வமிருந்தும் அதற்கான வாய்ப்புகளைப் பெற இயலாதவர்களுக்காக ஒரு தங்கும் விடுதியை ஆரம்பித்து அவர்களுக்கு இசைக் கல்வியை வழங்க வேண்டும் என்பதுதான் பத்மினியின் வருங்காலத் திட்டமாகும்.நமக்கென்று ஒரு தொழில் வேண்டும்; சாதிக்க ஒரு துறை வேண்டும். அது ஏன் இசையாக இருக்கக்கூடாது? என்பது மகளிருக்காகப் பத்மினி வழங்கும் ஆலோசனை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்