img
img

மாணவர்கள் மத்தியில் மோசமடையும் போதைப் பழக்கம்!
புதன் 19 ஏப்ரல் 2017 14:08:29

img

இடைநிலைப்பள்ளி மாணவர்கள் மத்தியில் கவலையளிக்கும் அளவிற்கு போதைப் பொருள் பழக்கம் மோசமடைந்துள்ளதையும் இவ்வாண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும் 825 மாணவர்கள் போதைப் பொருள் பழக்கத்திற்கு அடிமையாகி இருப்பது சோதனை வழி தெரிய வந்திருப்பதையும் தேசிய போதைப் பொருள் அமைப்பு (ஏஏடிகே) அம்பலப்படுத்தியது. நாடுதழுவிய நிலையில் ஜனவரியில் இருந்து மார்ச் வரையில் 29,583 மாணவர்கள் மீது நடத்தப்பட்ட போதைப் பொருள் சோதனையின் போது கெடா வில்தான் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் இந்த பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரிய வந்தது. கெடாவில் உள்ள 159 பள்ளிகளைச் சேர்ந்த 2,762 மாணவர்களில் 218 பேர் போதைப் பொருள் உட்கொள்வது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஆனால் 2016 ஆம் ஆண்டிற்கான அதிகாரப்பூர்வ புள்ளி விவரங்களை வெளியிட இயலாது என்று ஏஏடிகே தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் அப்துல் ஹலிம் முகமட் ஹுசேன் கூறினார். இதனிடையே நாடு தழுவிய நிலையில் மாணவர்கள் மத்தியில் நிலவும் போதைப்பொருள் பழக்கத்தை துடைத்தொழிக்கும் தனது முயற்சிகளை ஏஏடிகே தீவிரப்படுத்தும் என்று உள்துறை துணையமைச்சர் டத்தோ நூர் ஜஸ் லான் முகமட் கூறினார். இந்த விவகாரத்தை நாங்கள் கடுமையாக கருதுகிறோம். உடனடி நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க கல்வி இலாகாவை நாங்கள் விரைவில் சந்திக்க விருக்கிறோம் என்று அவர் தெரிவித்தார். ஏஏடிகே பணியாளர்கள் 400க்கும் மேற்பட்டோருக்கு சிறப்பு சேவைக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி யில் அவர் இதை தெரிவித்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img