மலாக்கா, தஞ்சோங் கிலிங் கில் உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் தங்களுடன் தங்கியிருந்த 17 வயது பெண்ணை ஒரு பாட்டிலைக் கொண்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை அதே மையத்தைச் சேர்ந்த நான்கு பெண்கள் நேற்று இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து விசாரணை கோரினர். நோர்ஷியஸ்வானா அஸ்மி, நூர் இமான் நினா டபேரி, மைஸாத்துல் ஹனிஸா அப்துல்லா, நோர்லிஹானி முகமட் ஸைரி ஆகிய நால் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி மாலை 5 மணியளவில் சுங்கை லேரா எனுமிடத்தில் உள்ள தூனாஸ் பக்தி பள்ளியின் மெலோர் ஹோஸ்டலில் தங்களுடன் தங்கியிருந்த மற்றொரு பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஐந்து ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகள் வரையிலான சிறைத் தண்டனை விதிக்கப்படலாம். தலா 15,000 வெள்ளி ஜாமினில் அவர்களை விடுவித்த செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி அகமட் சஸாலி ஒமார், மே 17ஆம் தேதி விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்