பெஸ்தினோ தங்க முதலீட்டுத்திட்டத்தில் பாதிக்கப்பட்டுள்ள முதலீட்டாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவ பேரா அரசு 1000 ஏக்கர் விவசாய நிலத்தை அடையாளம் காணும்படி பேரா மந்திரி புசார் அலுவலகம் பணித்திருப்பதாக பெஸ்தினோ முதலீடு மீட்புக் குழு இங்கு தெரிவித்தது. வெ. 1.41 கோடி முத லீட்டில் பெரும்பாலும் இந்தியர்களைக் கொண்டு நடத்தப்பட்ட பெஸ்தினோ தங்க முதலீட்டுத்திட்டம் தோல்வி கண்டதைத் தொடர்ந்து பலர் பாதிப்புக்குள்ளானார்கள். இம்முதலீட்டை மீட்கும் நோக்கத்தில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டிருக்கிறது. இவ்விவகாரத்தில் முதலீட்டாளர்கள் குறிப்பாக பேரா வாழ் முதலீட்டாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து அவர்கள் விவசாயம் கால் நடைவளர்ப்பில் கூட்டுறவு முறையில் ஈடுபடுவதற்கு 1000 ஏக்கர் நிலம் தேவைப்படுவதாகக் கூறி பேரா மந்திரி புசாரின் கவனத்திற்கு மனு சமர்ப்பிக்கப்பட்டது. இம்மனுவை பெற்றுக் கொண்ட பேரா மந்திரி புசார் அலுவலகம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு 1,000 ஏக்கர் விவசாயம் செய்வதற்கான நிலத்தை அடையாளம் கண்டு மனு செய்ய பணித்திருக்கிறது என்று அண்மையில் பெஸ்தினோ முதலீட்டாளர்கள் சந்திப்புக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. நீதி மன்ற நடவடிக்கை ஒரு புறமிருக்க முதலீட்டாளர்கள் வாழ்வாதாரத்திற்கு விவசாயத்தில் ஈடுபாடுகாட்டுவதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்படும் என்று மலேசிய சோசியலிஸ்ட் கட்சி தேசியத் துணைத் தலைவர் சரஸ்வதி கூறினார். பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்களுக்கு விவசாயம் செய்வதற்கு முதல் சலுகை வழங்கப்படும். இதற்காக கூட்டுறவு கழகம் ஒன்று விரைவில் அமைக் கப்படும் என்று பெஸ்தினோ முதலீடு மீட்பு பணிக்குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் குணசேகரன் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்