நடந்து முடிந்த கிம்மா கட்சியின் மாநாட்டில் ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமுதாயத்தையே இழிவுபடுத்தும் வகையில் கூட்டரசுப் பிரதேச அமைச் சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் பேசியிருப்பது மனசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய முஸ்லிம் அமைப்புகள் வருத்தம் தெரிவித்தன. இந்த விவகாரம் குறித்து நேற்று மாலை செந்தூல் ராயாவிலுள்ள பிரிஸ்மா தலைமையகத்தில் நடைபெற்ற அவசரக் கூட்டத்தில் பெர்மிம், மிம்கோய்ன், பிரிஸ்மா, மாவார் உட்பட நாடு தழுவிய ரீதியில் 60க்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துக் கொண்டனர்.கடந்த 15ஆம் தேதி நடைபெற்ற கிம்மா கட்சியின் 40ஆவது மாநாட்டை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் பேசினார். அக்கூட்டத்தில் சிறப்புரை ஆற்றிய அவர் இந்திய முஸ்லிம் உணவகங்கள் தே தாரேக், ரொட்டி சானாயை அதிக விலைக்கு விற்று வருவதாக கூறி யிருந்தார். மேலும் அதிகமான விலையை நிர்ணயிக்கும் உணவக உரிமையாளர்களின் முகத்தில் குவளைகளை எறியும் அளவுக்கு கோபம் வருவதாக அவர் கிண்டல் அடித்துள்ளார். உள்நாட்டு வர்த்தக கூட்டுறவுக்கழக பயனீட்டாளர் நலத்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள விலையின் அடிப்படையில்தான் நாங்கள் வாடிக்கையாளர் களிடம் கட்டணத்தை பெறுகிறோம். இதில் சொந்தமாக விலையை எந்த உணவக உரிமையாளரும் நிர்ணயிப்பது இல்லை. நாட்டில் உணவு, தேநீர் விலை ஏற்றம் கண்டால் அதற்கு பலிகடாவாக ஆவது இந்து முஸ்லிம் உணவகங்கள் மட்டும்தான். இது எந்தவிதத்திலும் நியாயம் இல்லை என பெர்மிம் அமைப்பின் தலைவர் ஹாஜி தஜுடின் பின் சாஹுல் தெரிவித்தார். கிம்மா மாநாட்டில் மட்டுமின்றி இரு தினங்களுக்கு முன்பு புத்ராஜெயாவில் நடைபெற்ற மஇகாவின் சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டத்திலும் இந்திய முஸ்லிம் உணவகங்களை அவர் கேவலமாக பேசியுள்ளார். உண்மையாகவே இதற்கு முன்னதாக அவர் பேசிய வார்த்தைகள் பற்றி அவர் கவலைபட்டிருந்தால் மீண்டும் மீண்டும் அதே வார்த்தைகளை அவர் பயன்படுத்தியிருக்க மாட்டார். ஆகையால் தெங்கு அட்னான் பேசிய வார்த்தைகளை அவர் உடனடியாக மீட்டுக் கொள்ள வேண்டும் என கூட்டத்தில் கலந்து கொண்ட 60க்கும் மேற்பட்ட இந்திய முஸ்லிம் அமைப்புகள் ஒருமித்த குரலுடன் தெரிவித்தன. நாங்கள் அரசியல் சார்பற்ற இயக்கங்கள். ஆகையால் இந்த விவகாரத்தை அரசியல் ஆக்க விரும்பவில்லை. கிம்மா இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறதா? இல்லையா? என்பதை நாங்கள் பெரிதுபடுத்த விரும்பவில்லை. மாறாக நாட்டிலுள்ள இந்திய முஸ்லிம் அமைப்புகளின் பிரதிநிதிகளான நாங்கள் அனைவரும் தெங்கு அட்னானின் செயலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறோம் என அவர் சொன்னார். கிம்மா மாநாட்டில் தெங்கு அட்னான் இந்திய முஸ்லிம் உணவகங்களை இழிவாக பேசியபோது அங்குள்ளவர்கள் கைத் தட்டியது குறித்து கேள்வி கேட்டபோது, தெங்கு அட்னான் மலாய் மொழியிலும் ஆங்கில மொழியும் கலந்து பேசியதால் அங்குள்ளவர்கள் அவர் பேசியது புரியாமல் கையை தட்டியதாக பிரிஸ்மா இயக்கத்தின் தலைவர் அயூப் கான் தெரிவித்தார். நாங்கள் நாட்டின் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிற்கு முழு ஆதரவை வழங்குகிறோம். இந்த விவகாரம் ஒருபோதும் எங்களின் ஆதரவை குறைத்து விடாது. ஒரு சமுதாயத்தை இழிவுப்படுத்திய தெங்கு அட்னானின் வார்த்தைகளை உடனடியாக அவர் மீட்டுக் கொள்ளபட வேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு கூட்டத்தை நடத்தி அடுத்தக்கட்ட முடிவை எடுப்போம் என அயூப் கான் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்