வீடின்றி 26 நாய்களுடன் ஒரு சிறு கொட்டகையில் இங்கு ரெலாவ், தாமான் அலோர் விஸ்தாவில் வசித்து வரும் 60 வயதுடைய ஆதரவற்ற ஜேம் ஸிற்கு உதவுவதற்கு இரு பெண்கள் முன் வந்துள்ளனர். கோலாலம்பூரைச் சேர்ந்த ஒரு பெண்ணும் கெடா, கூலிமையை சேர்ந்த ஒரு பெண்ணும் தனக்கு உதவ முன்வந்ததாக ஜேம்ஸ் குறிப்பிட்டார். அவர்கள் தமக்கு உணவை வழங்குவதற்கு உறுதி பூண்டு இருப்பதுடன் இப்படிப்பட்ட நல்லுள்ளங்கள் இருப் பதை கண்டு இறைவனுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் சொன்னார். கண்கள் சரியாக தெரியாததால் அவர்களை என்னால் பார்க்க முடியவில்லை. ஆனால், அவர்கள் கருணைமிக்கவர்கள் என்பது அவர்களின் பேச்சின் மூலம் தெரிகிறது என்றார் அவர். அரிசி, கோழி இறைச்சி, பால்மாவு, முட்டைகள், டின்னில் உள்ள உணவுப்பொருட்கள், திடீர் மீ போன்றவற்றை வழங்கி விட்டு அவர்கள் சென்றுள்ளதாக ஸ்டார் நாளிதழுக்கு ஜேம்ஸ் கூறியுள்ளார். ஜேம்ஸ் கடந்த 12 ஆண்டு களுக்கு மேலாக இந்தக் குடிசையில் தான் வாழ்ந்து வருகிறார். அவருக்கென்று யாருமில்லை என்று கூறுகிறார். தெருவில் போவோர் வருவோர் போடுகிற காசைக் கொண்டு தான் சாப்பிட்டு வருகிறார். தன்னோடு இருக்கிற 26 ஆதரவற்ற ஜீவன் களான இந்த நாய்களுக்கும் சோறு போடுகிறார். இருக்கும் வரைக்கும் இந்த நாய்களுடனேயே இருந்து விடுவதாக முதியவர் ஜேம்ஸ் கூறுகிறார். இங்கு தாமான் அலோர் விஸ்தாவிலுள்ள ஒரு வெற்றிடத் தில் ஜேம்ஸின் கொட்டகை அமைந்துள்ளது. ‘சில நாள்களில் சாப்பிட எதுவும் இருக்காது. நாய்களின் பிஸ்கட்டுகளையே நானும் சாப்பிட்டுக் கொள்வேன். பெரும்பாலோர் இரக்கப்பட்டு எனக்கு ஏதாவது தருவார்கள். பிச்சை எடுத்துதான் நானும் என் நாய்களும் சாப்பிடுகிறோம்’
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்