நாடு முழுவதும் உள்ள 144 அரசாங்க மருத்துவமனைகளில் நோயாளிகளை அனுமதிப்பதற்காக நாள் ஒன்றுக்கான கட்டணம் முதல் வகுப்பில் 60 வெள் ளிக்கும் 120 வெள்ளிக்கும் இடைப்பட்ட நிலையில் உயர்வு கண்டுள்ளது. மருத்துவ உதவித் தொகை குறைக்கப்பட்டதை தொடர்ந்து இக்கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. முன்பு நோயாளிகள் நாள் ஒன்றுக்கு 30 வெள்ளி முதல் 80 வெள்ளி வரை செலுத்தி வந்துள்ளனர். தனியொருவராக குளிர்சாதன வசதியை கோருகின்றவர்கள் நாள் ஒன்றுக்கு 120 வெள்ளி செலுத்த வேண்டும். இது 50 விழுக்காடு உயர்வு கண்டுள் ளது. முன்பு இதற்கு 80 வெள்ளி மட்டுமே கட்டணம் விதிக்கப்பட்டு வந்தது. தங்குவதற்கான அறையை மற்ற நோயாளிகளுடன் பகிர்ந்து கொண்டால் 60 வெள்ளி முதல் 90 வெள்ளி வரையில் கட்டணம் செலுத்தப்பட வேண்டும். பகிர்ந்து கொள்ளும் நோயாளிகளின் எண்ணிக்கையை பொறுத்து இது அமைகிறது.ரேடியோ தெராபி, புற்றுநோய் சிகிச்சை, பாரம்பரிய மருத்துவ சிகிச்சை, எக்ஸ்ரே சோதனை மற்றும் அறுவை சிகிச்சை போன்றவற்றிற்கு கட்டணம் 50 விழுக்காடு உயர்த்தப்பட்டதை தொடர்ந்து நோயாளிகள் மருத்து வமனையில் அனுமதிப்பது தொடர்பாக கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. இரண்டாவது வகுப்பிற்கான நோயாளிகள் அனுமதி கட்டணமும் 25 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தப்பட்டுள்ளது. மூன்றாவது வகுப்பு கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை. வழக்கம் போலவே கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மூன்றாவது வகுப்பிற்கான கட்டணம் கடந்த 35 ஆண்டு காலமாக சீரான நிலையிலே இருந்து வருகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்