கடந்த 2016ஆம் ஆண்டின் யூபிஎஸ்ஆர், பிடி3, எஸ்பிஎம் தேர்வுகளில் புத்ரா ஜெயாவிலுள்ள பள்ளிகளில் பயின்ற சிறந்த அடைவு நிலை பெற்ற மாண வர்கள் நேற்று முன்தினம் சிறப்பு செய்யப்பட்டனர். புத்ரா ஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் வருகை தந்த மாணவர்களை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் சிறப்பித்தார். கல்வி கேள்விகளில் இந்த மாணவர்களின் உழைப்பு மிகவும் அபரிமிதமானது. இதுபோன்ற மாணவர்களால் தமது தொகுதியான புத்ரா ஜெயாவின் புகழ் நாட்டில் மேலோங்கி வருகின்றது. மேலும் மாணவர்களுக்கு ஊக்கம் கொடுத்த பெற்றோர்களும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்களும் கூட போற்றத்தக் கவர்கள் என தெங்கு அட்னான் கூறினார். இதன்போது சிறந்த இந்திய மாணவி ஒருவருக்கு அமைச்சர் விருது வழங்கி கௌரவித்தார். இந்த சிறந்த மாணவர்களுக்கு விருது வழங்கி கௌரவப் படுத்துவதில் நான் பெருமைப்படுகின்றேன். எதிர்காலத்தில் இதுபோன்ற மாணவர்கள் தான் நமது நாட்டை வழிநடத்தப் போகின்றவர்கள். இந்த விருது மாணவர்களை மேலும் உற்சாகப்படுத்தி அவர்கள் கல்வியில் மேன்மேலும் சாதனைகள் புரிய ஊக்குவிப்பாய் அமையும் என தெங்கு அட்னான் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்