சிகாம்புட், சுங்கை ஊடாங்கில் சுமார் 2.23 ஹெக்டர் நிலப்பரப் பில் கோலாலம்பூர் மாநகர் மன்ற வீடமைப்பு திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவிற்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் நேற்று இங்கு வந்தடைந்த வேளையில், ஜிஞ்சாங் நீண்ட வீடுகளைச் சேர்ந்த மக்கள் தங்கள் வீட்டுப் பிரச்சினையை பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நீண்ட காலமாக நீண்ட வீடுகளில் குடியிருக்கும் தங்களின் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்பட வேண்டும் என்று ஜிஞ்சாங் மக்களின் பிரதி நிதியான பொன்னம்பலம் நேற்று கூறினார். இதனிடையே, குறைந்த வருமா னம் பெறும் பிரிவினருக்காக சிகாம்புட்டில் இந்த வீடமைப்பு திட்டத்தை கோலாலம்பூர் மாநகர் மன்றம் தொடங்குவதாக பிரதமர் நஜீப் அந்நிகழ்ச்சியில் உரை நிகழ்த்தும் போது கூறினார். மூன்று படுக்கை அறைகள், இரண்டு குளியல் அறைகளைக் கொண்ட இந்த அடுக்கு மாடி வீடுகள் வாடகை அடிப்படையில் தகுதி பெறும் மக்களுக்கு வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.இதற்கான வாடகைக் கட்டணம் மாதம் ஒன்றுக்கு வெ.800 ஆகும். அதில் வெ.500 மாதா ந்திர வாட கைக் கட் டணமாகும். மீதமுள்ள வெ.300 ஒரு சேமிப் பாக ஒதுக்கி வைக்கப்படும். தங்களின் 5 ஆண்டுகள் வாடகை ஒப்பந்தம் முடி வடைந்ததும் அந்த சேமிப்பு தொகை மொத்தம் வெ.18,000- மாக அவர்களுக்குத் திருப்பித் தரப்படும் என்றும் நஜீப் விளக்கம் அளித்தார். அந்த வெ.18,000-ஐ புதிய வீடு வாங்குவதற்கான முன் பணமாக சம்பந்தபட்டவர்கள் பயன் படுத்திக் கொள்ளலாம் என் றார் அவர். இது, மாதம் ஒன்றுக்கு வெ.10,000-க்கும் குறைவான வரு மானம் பெறும் பிரி வினருக்கான சிறப்பு வீடமைப்புத் திட்டமாகும் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்