மலேசிய இந்திய செயல் வரைவுத் திட்டம் 2017 எனும் மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார உருமாற்றத்திற்கான நீண்டகால செயல் திட் டத்தினை பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் இரண்டாவது முறையாக வரும் 23.4.2017 இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவிருக்கும் வேளையில் அதன் செயல்பாடுகளும் இலக்குகளும் எவ்வாறு அமைந்திருக்க வேண்டும் என்பதை ஏவுகணை விவரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருப்பதாகவே கருது கின்றது. மலேசிய இந்தியர்களில் பெரும்பாலோர் மந்திரித்து விடப்பட்டவர்களாகவே சிதறிக் கிடக்கும் இந்தியர் சார்ந்த அரசியல் கட்சிகளின் அங்கத்துவம் பெற்று அதன் தலைவர்களின் தேவைகளான பட்டம், மானியம், அரசாங்கப் பதவிகள் சுற்றத்தாரின் நலன்கள் போன்றவற்றை அரசாங்கத்திடமிருந்து பெற்றுக் கொள்வதை பெருமையாகக் கருதி ஒரு பரிசுக் கூடையோடும், கோலாலம்பூர் இலவச சுற்றுலாவுடனும் முடித்துக் கொள்கின்றனர். மலேசிய இந்தியர்களின் ஒரே அரசாங்க பிரதிநிதியான ம.இ.கா.வின் உ றுப்பினர்களும் தங்களுடைய தலைவர்களின் தேவைகளை நிறைவுச் செய் வதற்காக மக்களின் நலன்களை புறந்தள்ளிவிட்டு தங்களுடைய தேவைகளில் சிலவற்றை மட்டுமே பெற்றுக் கொண்டு ஒட்டு மொத்த மலேசிய இந் தியர்களின் நலன்களுக்கு சாதகமான செயல் பாடுகள் இல்லாமல் 60 ஆண்டுகளை கடந்து வந்துள்ளேன். ம.இ.கா.வின் வழி மலேசிய இந்தியர்களில் சிலர் பெற்ற அனுபவங்கள் பின் வருமாறு. * வீட்டு மின்சார/ நீர், வாடகைக் கட்டணங்கள் * மலிவு விலை வீடுகளின் தவணைக் கட்டணங்கள் * பிள்ளைகளின் உயர் கல்விக்கான கடன்கள் * வர்த்தகம் செய்வதற்கான கடன்கள் * பூமாலை, பாசிமணி கோர்க்கும் பயிற்சிகள் * ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தில் கல்விக்கடனோடு பயிலும் வாய்ப்புகள் * பரிசுக் கூடைகள், சிறப்பான உணவுடன் கூடிய விருந்துகள் ஒன்றை நன்மைகளாக இந்திய மக்களை அடைந்திருப்பதாக கருதும் நிலையில் ம.இ.கா.வின் தலைமை பொறுப்பில் இருப்பவர்கள் * கல்வி நிலையங்கள் சார்பில் மில்லியன் கணக்கில் மானியங்கள் * அரசு சாரா இயக்கங்களின் வழி மில்லியன் கணக்கில் மானியங்கள் * தொழில் திறன் பயிற்சிகள் என மில்லியன் கணக்கில் மானியங்கள் * அரசாங்கச் செலவில் வெளியூர் சுற்றுலாக்கள் * இந்திய கோட்டாவின் மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான அரசாங்க குத்தகைகள். * மாதந்தோறும் மிகப்பெரிய ஊதியத்தினை தரக்கூடிய அரசாங்க பதவிகள் * வெளியூர்களில் உயர் கல்வி பெறும் உபகாரச் சம்பள வாய்ப்புகள் போன்றவற்றைப் பெற்றுக் கொண்டதை மறுக்கத்தான் முடியுமா? காலனித்துவ சமூக நிர்வாகம் : மலேசிய இந்தியர்கள் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளாக ஆன பின்னரும் சமூக இன்னல்களிலிருந்து விடுபடாமல் இருப்பதற்கு மூல காரணமே ம.இ.கா.வின் வழி மேற்கொள்ளப்பட்ட சமூக நிர்வாகத்தின் மிகப்பெரிய பலவீனமே என்பதை யாராவது மறுக்க முடியுமா? கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்களில் சமூக பொருளாதார இன்னல்களைத் தீர்ப்பதற்கான நீண்ட கால செயல் திட்டங்களே இல்லாமல் மானியங்களை வரவு வைத்துக் கொண்டு இந்தியர்களின்தேவைகளை கபளீகரம் செய்யப்பட்டிருப்பதையும் ஏவுகணையால் நிரூபிக்க முடியும். காலனித்துவ ஆட்சியில் தோட்டப்பாட்டாளிகளின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கங்காணிகளின் நலனும் மண்டோர்களின் நலன்களும் கிரா ணிமார்களின் நலன்களும் மேனேஜர்களின் நலன்களும் காக்கப்பட்டது போலவே ம.இ.கா.வின் செயல்பாடுகளும் சமூக பொருளாதார நிலையில் வஞ்சிக்கப்பட்டவர்களின் நலன்களுக்கு முன்னுரிமை வழங்காமல் கிளைத் தலைவர்களுக்கும் தொகுதித் தலைவர்களுக்கும் மாநில தொடர்புக் குழுத் தலைவர்களுக்கும் தேசிய நிலையிலான தலைவர்களுக்கும் மட்டுமே முன்னுரிமை வழங்கப் பட்டிருக்கும் ஒற்றுமையின் வழி 60 ஆண்டுகளாகியும் மலேசிய இந்தியர்கள் மட்டும் இன்னமும் காலனித்துவ நாட்களையே அனுபவித்து வரும் கொடூரத் தினை உணர முடியும். ஏமாற்றியதும் போதும்: மலேசிய இந்தியர்கள் கடந்த 60 ஆண்டுகளில் சமூகப் பொரு ளாதார செயல்பாடுகளிலிருந்து விடுபட்டுள்ளனர் என்பதைப் பிரத மர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுள்ளார் என்பது மெய்தானே! 18.4.2013இல் ஹிண்ட்ராப்புடன் செய்து கொண்ட ஐந் தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ‘கடந்த காலங்களில் இந்திய சமூகத்திற்கு ஏற்பட்ட இழப் புகளுக்கு வருந் துகிறேன்’ எனக் கூறியதும் உண்மைதானே! ஹிண்ட்ராப் புடனான ஐந்தாண்டு செயல் வரைவுத் திட்டத்தின் வழி மலேசிய இந்தியர்களின் குறிப்பாக சமூகப் பொருளாதார இன்னல்களினால் நலிவுற்றிருக் கும் சுமார் 800,000 இந்தியர்களின் நீண்டகால அடிப்படையில் நலன்களைப் பேணுவ தற்கான திட்டங்கள் வரையறுக்கப் பட்டிருந்ததும் உண்மைதானே! * இடப்பெயர்வு செய்யப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் கல்வி, சமூகம், பொருளாதார மேம்பாடுகளுக்கான திட்டமிடப்பட்ட நடவடிக்கைகள் * அடையாள ஆவணங்கள் இல்லாமல் தினம் தினம் நலிவுற்று வரும் நாடற்ற இந்தியர்களுக்கான நிரந்தரமானத் தீர்வு * பாலர்கல்வி முதல் பல்கலைக்கழகம் வரையிலான உயர்கல்வி வாய்ப்புகளும் இந்திய மாணவர்களுக்கு உறுதிப் படுத்துதல் * அரசாங்க வேலை வாய்ப்புகளையும் வர்த்தக வாய்ப்புகளையும் மேம்படுத்துதல் ஆகிய நான்கு முக்கிய இலக்குகளைக் கொண்டு நேர்த்தியாக வரையறுக்கப்பட்ட திட்டங்களை உட்படுத்தியிருந்ததும் உண்மை தானே! மலேசிய இந்திய சமூகத்தில், சமூகப் பொருளாதார ரீதியில் சவால்களை எதிர்நோக்கியுள்ள இந்தியர்களுக்கு விடியலை ஏற்படுத்த வேண்டிய செயல் வரைவுத் திட்டத்தினைச் செயல்படுத்த முடியாமல் போனதற்கு ஏன் மஇகா குரல் எழுப்பவில்லை? பிரதமரின் செயல்பாடுகளுக்கு பல்வேறு தடைகளை ஏற்படுத்தியது ஏன்? நாடறிந்த கல்வி நிலைய இயக்குநராக உதிரிக் கட்சிகளும் ஹிண்ட்ராப் செயல்வரைவுத் திட்டத்தினை எதிர்த்தபோது ஏன் அமைச்சரவையில் இவ்விவகாரத் திற்குத் தீர்வு காணவில்லை? மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காகப் போராடுவதாக மூச்சுக்கு மூச்சு தேர்தல் காலங்களில் மட்டும் இந்திய வாக்காளர்களின் சந்திப்பின் போது கூறி வரும் இந்திய எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளு மன்ற விவாதங்களின் போது கேள்வி எழுப்பவில்லையே ஏன்? போன்ற கேள்விகளுக்கு நிச்சயமாக ஏவுகணை பதிலை எதிர்பார்க்க முடியாது என்பது 100 விழுக்காடு உண்மை. * மஇகா * இந்தியர் உதிரிக்கட்சிகள் * எதிர்க்கட்சிகளின் இந்தியர் பிரதிநிதிகள் ஆகியவைகளுக்கு சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின்தங்கியிருக்கும் இந்தியர்களுக்கு நிரந்தரமான தீர்வினைக் காணவேண்டிய முக்கியத்துவம் அறவே இல்லை என்பதையாவது உணர்ந்து கொள்ளும் திறனாவது பாதிக்கப்பட்டவர்களுக்கு உண்டா என்ற சந்தேகமே ஏவுகணைக்கு ஏற்பட் டுள்ளது. இனியும் தொடரத்தான் வேண்டுமா?: கடந்த 60 ஆண்டுகளாக மலேசிய இந்தியர்கள் அனுபவித்து வரும் சமூகப் பொருளாதார இன்னல்களுக்கு அர சாங்கம் காரணமல்ல. மாறாக இந்தியர்களைப் பிரதிநிதிக்கும் அரசியல் கட்சியே என்பதை மறுக்க முடியாத நிலையில் 23.4.2017இல் அறிவிக்கப்பட் டிருக்கும் மற்றொரு மெகா திட்டமான மலேசிய இந்தியர் செயல்வரைவுத் திட்டத்திற்கும் (MIB) செயல்படுத்துவதற்கான முதன்மைப் பொறுப்பு மஇகா விற்கே வழங்கப்பட வேண்டுமா என்பதை நாளை ஆய்வு செய்வோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்