14 ஆவது பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற கூடும் என்ற ஆரூடம் பரவலாக பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில் தேசிய முன்னணியின் கரங்களை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் ஐபிஎப் கட்சி அதற்கான ஆயுத்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதையடுத்து அக்கட்சியின் மகளிர் பிரிவு நாடுதழுவிய நிலையில் அதன் தேர்தல் இயந்திர பிரச்சார குழுவை அமைக்க விருப்பதாக மகளிர் அணியின் தலைவி ராஜம்மா தெரிவித்தார். குறிப்பாக இந்தியர்கள் அதிகம் வாக்காளர்களாக இருக்கும் தொகுதிகளை அடையாளம் கொண்டு அங்கு தேர்தல் இயந்திர பிரச்சார குழுவை அமைப் பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கெடா மாநிலம் தொடங்கி ஜொகூர் மாநிலம் வரை ஐபிஎப் கட்சியின் மகளிர் அணியின் தேர்தல் இயந் திர பிரச்சார குழுவில் 30 முதல் 50 உறுப்பினர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதன் வழி தேமு களமிறங்கும் தொகுதிகளில் இந்த தேர்தல் இயந்திர பிரச்சார குழு தனது பணியை மேற்கொள்ளும் என ராஜம்மா குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்