எச்1என்1 சளிக் காய்ச்சல் காரணமாக கர்ப்பிணி ஒருவர் மரண முற்றார். இதனை திரெங் கானு சுகாதார இலாகா உறுதிப்படுத்தியுள்ளது. எனினும் எச்1என்1 பிரச்சினை மாநிலத்தில் மோசமாகி வருவதாக கூறப்படு வதை மாநில சுகாதார இலாகா வின் இயக்குநர் டாக்டர் முகமது ஒமார் மறுத்தார். காய்ச்சல் காரணமாக ஒரு வார காலமாக அவதிப்பட்டு வந்த இந்த பெண்மணி ஏப்ரல் 7ஆம் தேதி மருத்துவமனையில் அனு மதிக்கப்பட்டார். அரசாங்க மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்பாக இவர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தார். தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்டிருந்த இவர் முதலில் இவரின் நிலையில் முன்னேற்றம் தெரிந்தது. ஆனால் ஏப்ரல் 13இல் இவர் மரணமுற்றார். எச்1என்1 சளிக்காய்ச்சல் கிருமிகளுக்கு ஆட்படக்கூடிய வர்கள் கர்ப்பிணிப் பெண்கள், சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோயி னால் பாதிக்கப்பட்டவர்கள். இந்தத் தொற்றுக் கிருமி குறித்து பொதுமக்கள் தேவை யில்லாமல் கலவரமடையக் கூடாது என்றும் மாநில சுகாதார இலாகா இயக்குநர் டாக்டர் முகமது ஒமார் கேட்டுக் கொண் டார். எச்1என்1 நோய்க்கான அறிகுறிகள் இருக்குமானால் அப் படிப்பட்டவர்கள் வெளி யாட்களுடன் கலந்துற வாடக்கூடாது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்