போலி ஐ போன் 6எஸ் ரகக் கைப்பேசியை குறைந்த விலையில் விற்று வந்த கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்ததன் வழி அந்நடவடிக்கை போலீ சாரால் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கைப்பேசிகளை வெ.500க்கு அந்த கும்பல் விற்று வந்துள்ளது. தற்போது சந்தையின் அதன் அசல் விலை வெ.3,000 ஆகும். பெட்ரோல் நிலையத்திலும் இங்குள்ள பேரங்காடிகளிலும் இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் போலி கைப்பேசிகளை விற்று வந்துள்ளனர். கடந்த புதன்கிழமை இந்த கும்பலிடம் போலி கைப்பேசியை வாங்கி ஏமாந்த இரு நபர்கள் போலீசில் புகார் செய்துள்ளனர். இதன் அடிப்படையில் போலீஸ் மேற்கொண்ட அதிரடி சோதனையில் செராசிலும் அம்பாங்கிலும் 24,52 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டதாக உலு சிலாங்கூர் மாவட்ட போலீஸ் படைத் தலைவர் ஆர்.சுப்பிரமணியம் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்