இந்திய முஸ்லிம் வணிகர்களுக்கென இந்நாட்டில் தனி வரலாறு உள்ளது. அது மட்டுமல்ல, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அவர்கள் மிகப்பெரிய பங் கினை ஆற்றி வருகின்றனர் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்படியிருக்க, நாட்டின் மூத்த அமைச்சரான தெங்கு அட்னான் இந்நாட்டு இந்திய முஸ் லிம் வணிகர்களை ஏளனப்படுத்தி பேசியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என மலேசிய இந்திய முஸ்லிம் வர்த்தக சங்கத்தின் தலைவர் டத்தோ ஹாஜி ஜமாருல் கான் நேற்று கூறினார். அதிலும், இந்திய முஸ்லிம்களை பிரதிநிதிக்கும் மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸான கிம்மா ஆண்டுக் கூட்டத்தில் அவர் அவ்வாறு பேசியதைக் கேட்டு கைக்கொட்டி சிரித்த கிம்மா உறுப்பினர்களின் செயல் அதை விட கேவலமானது என்று அவர் கண்டனக் குரல் எழுப்பினார். இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களான மாமாக் உணவகத்தினர் தாங்கள் விற்பனை செய்யும் ரொட்டி சானாய் மற்றும் தே தாரேக்கிற்கு அதிகமான விலையை நிர் ணயிப்பதாக கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர் அக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். மேலும், எதிர்க்கட்சியுடன் இந்திய முஸ்லிம் வணிகர்களை ஒப்பிட்டு பேசியிருக்கிறார். இது ஹராம் என்றும் எங்களின் பகுத்தறிவு பற்றியும் தெங்கு அட் னான் குத்தலாக பேசியிருக்கிறார். அவர் ஒரு மூத்த அமைச்சர், அம்னோவின் பொதுச் செயலாளர். இத்தனை முக்கியமான பொறுப்புகளில் இருக்கும் அவர் இப்படி பொறுப்பற்றவராக பேசியிருப்பது முறையா என்று ஜமாருல் கான் கேள்வி எழுப்பினார். அனைத்து சமூகமும் ஒன்று. இந்த நாட்டில் நாம் அனைவரும் ஒருவரையொருவர் அனுசரித்து நடந்து கொள்ள வேண்டும். இதுதான் நமது பண்பு என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தி வருகிறார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் தெங்கு அட்னான் இந்திய முஸ்லிம் வணிகர்களை இழிவுபடுத்தும் வகையில் பொது மேடையில் பேசியிருப்பது எங்கள் ஒவ்வொருவரின் உணர்வையும் கீறிப்பார்க்கும் வகையில் உள்ளது. ஒரு கிளாஸ் தே தாரேக்கு 50 காசு கூடுதலாகவும், ரொட்டி சானாய்க்கு கூடுதல் விலையையும் நாங்கள் வசூலிப்பதாகக் கூறும் அட்னான், இதே ஆடம்பர உணவகத்திலும் அல்லது ஓட்டல்களிலும் தே தாரேக் உடன் ரொட்டி சானாய் சாப்பிடும்போது அந்த விலை பற்றி ஏதேனும் குறை கூறுகிறாரா அல்லது கூற முடியுமா? தெங்கு அட்னான் பேசும் முன் யோசிக்க வேண்டும். இந்நாட்டு இந்திய முஸ்லிம் வணிகர்களின் மனதை புண்படுத்தும் வகையில் அவர் பேசியிருப்பது தவறு என்று ஜமாருல் கான் சுட்டிக்காட்டினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்