வரும் 14ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடவிருக் கும் மஇகா வேட் பாளர் பட்டியல் சரி பார்க்கப்பட்டு வரும் நிலையில் பிரதமரும் தேசிய முன் னணித் தலைவருமான டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் உத்தரவுப்படி ஒவ்வொரு தொகுதியிலும் மூன்று வேட்பாளர்களின் பெயர்களை பிரத மரின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ளேன் என்று மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் சூசகமாக பதில் கூறினார். நேற்று இங்குள்ள புளூவேலி பகுதியில் இந்தியர் பொது மண்டப அடிக்கல் நாட்டு விழாவில் கலந்து கொண்டு செய்தியாளர்களிடம் இவ்வாறு கூறினார். நாட்டின் 14ஆவது பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் வரலாம் என்ற ஆரூடங்களுக்கு மத்தியில் தேசிய முன்னணி உறுப்புக் கட்சியான கெராக்கான் கட்சி தனது வேட்பாளர் பட்டியலை பிரதமரிடத்தில் ஒப்படைத்திருப்பதாக அக்கட்சியின் தேசியத் தலைவர் அறிவித்திருக்கும் பட்சத்தில், மஇகா அதன் வேட்பாளர் பெயர் பட்டியலை பிரதமரிடம் சமர்ப்பித்துள்ளதா என்ற கேள்விக்கு பதில் கூறுகையில் அவர் இவ்வாறு கூறினார். மஇகா போட்டியிடும் தொகுதிகளிலிருந்து தகுதியான மூவரின் பெயர்களை தம்முடைய கவனத்திற்கு சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொண்டதற்கு இணங்க, மஇகா போட்டியிடும் ஒன்பது நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 19 சட்டமன்ற தொகுதிகளிலிருந்து மூன்று பெயர்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்று கூறினார். சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் மூவரது பெயர்களை பிரதமர் பார்வையிட்ட பிறகு அவருடன் கலந்து பேசி போட்டியிட தகுதியான வேட்பாளர் யார் என்பது பற்றி இறுதி முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். தேசிய முன்னணித் தலைவர் என்ற முறையில் பிரதமரின் ஆலோசனை மிக முக்கியம் பிரதமரின் கவனத்திற்கு சமர்ப்பித்துள்ள பெயர் பட்டியலில் 60 விழுக்காடு புதியவர்கள் என்று சுப்ரா தெரிவித்தார். இறுதி பட்டியல் விரைவில் தயாராகும் என்றும் சொன்னார்.இதனிடையே இங்குள்ள புளூவேலி பகுதி யில் புதிதாக இந்தியர் சமூக மண்டபம் நிர்மாணிப்பதற்கு அரசாங்கத்திடமிருந்து வெ.10 லட்சம் பெறப்பட்டுள்ளது என்றும் வெ. 5 லட்சம் பொதுமக்கள் நன்கொடையாக வழங்கியுள்ளனர் என்றும் கூறினார். இப்பகுதியில் புதிய ஆலயம் ஒன்றும், புதிய தமிழ்ப்பள்ளி (புளூவேலி தமிழ்ப்பள்ளி) கட்டப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ எஸ்.கே.தேவமணி, புளூவேலி தோட்ட ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத் தலைவர் ரெங்கசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்