பினாங்கு மாநிலத்தில் உள்ள இந்துக்கள், ஈமச் சடங்குகளை செய்வதற்கு நிரந்தரமான ஓர் இடம் இல்லை என்ற மலேசிய நண்பனின் செய்திக்கு ஆதா ரமாக, இந்த விவகாரத்தை கவனிக்க வேண்டிய மாநில துணை முதலமைச்சர் பேராசிரியர் டாக்டர் பி.ராமசாமி கடந்த 2012-ஆம் ஆண்டிலிருந்து இதில் அலட்சியப் போக்கை காட்டி வருவது அம்பலமாகியுள்ளது. 2012 ஜனவரி 6-ஆம் தேதி மாநில முதலமைச்சர் லிம் குவான் எங்குடன் நடைபெற்ற ஒரு கலந்துரையாடலில் அனைத்து சமய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பினாங்கு மாநில இந்து சங்கத்தை பிரதிநிதித்து எம்.பி.ஐயப்பனும், சண்முகநாதனும் கலந்து கொண்டனர். ஈமச் சடங்குகளை செய்வதற்கு நிரந்தர இடம் வேண்டும் என அப்போது வைக்கப்பட்ட கோரிக்கையை லிம் குவான் எங் ஏற்றுக்கொண்டு, இரு இடங்களை அடையாளம் காணும்படி ராம சாமிக்கு உத்தரவிட்டார். எனினும், இன்று வரை ராமசாமி அப்பிரச்சினைக்கு தீர்வு காணவில்லை என்பதை ஐயப்பன் அம்பலப்படுத்தியுள்ளார். மலேசிய நண்பனுடன் தொடர்பு கொண்டு அவர் தந்த விளக்கம் கீழ்வருமாறு: கருமக்கிரியை நில விவகாரம் ஏன் தீர்வு காணப்படவில்லை? கடந்த 6.1.2012-இல் நடைபெற்ற மாநில முதல்வருடனான கலந்துரையாடல் நிகழ்வில், பினாங்கு மாநில சர்வ சமய மன்ற பிரதிநிதிகள் கலந்து கொண் டனர். அந்த கலந்துரையாடலின்போது பினாங்கு மாநில இந்து சங்கத்தை பிரதிநிதித்து நானும் சண்முகநாதனும் கலந்து கொண்டோம். அவ்வமயம் பினாங்கு வாழ் இந்து பெருமக்கள், நீத்தார் கடன் (ஈமச் சடங்குகள்) செய்வதற்கு பினாங்குத் தீவிலும் பெரு நிலத்திலும் உகந்த இடங்களை நிரந்தரமாக ஒதுக்கித் தருவதற்கு பினாங்கு மாநில அரசு உதவ வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தோம். தற்போதைய சூழலில் காரியம் செய்வதற்கு குறிப்பிட்ட இடம் அடையாளம் காணப்படாத நிலையில் மக்கள் ஒரு சில தேர்வு செய்யப்பட்ட இடங்களில் கிரியைகளை செய்து வருகின்றார்கள். ஆனால் உள்ளூர் மாநகர மன்றத்தின் கெடுபிடியால் அவ்வப்போது அபராத அழைப்பாணை பிறப்பிக்கப்பட்டு பல தொல்லைகளுக்கு ஆளாக்கப்படுகின்றார்கள் என்ற வேதனை செறிந்த கருத்தையும் முன் வைத்தோம். எங்களின் கோரிக்கைக்கு மற்ற சமயத்தைச் சார்ந்த உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்தனர். இக்கலந்துரையாடல் நிகழ்வில் பிஷாப் அந்தோணி செல்வநாயகமும் கலந்து கொண்டு மாநில சர்வ சமய மன்றத்திற்கு மாநில அரசு மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார். அதன் பலனாக ஆண்டுக்கு வெ.50,000 மானியம் அளிப்பதாக உறுதியளிக்கப்பட்டு அது செயல் படுத்தப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். எங்களின் வேண்டுகோளை செவிமடுத்து மாநில முதல்வரும் இக்கோரிக்கை நியாயமானதாக இருப்பதை ஏற்றுக்கொண்டு, துணை முதல்வர் பி.இராம சாமியிடம் அதற்கான தீர்வு காணும் வகையில் மாநிலத்திலும் பெரு நிலத்திலும் இரு இடங்களை அடையாளங்கண்டு செயல்படுத்துமாறு உத்தரவு பிறப்பித்தார். பின்னாளில் துணை முதல்வரும் இரண்டு இடங்கள் அடையாளம் காணப்பட்டு விட்டதாகவும் கூடிய விரைவில் இத்திட்டம் செயல் வடிவம் பெறும் என் றும் கூறி வந்துள்ளார். ஆனாலும் காலம் கடந்து விட்ட நிலையிலும் எங்களின் கோரிக்கை இன்னமும் கிணற்றில் போட்ட கல்லாக காணாமல் போய் விட்டது. வரும் பொதுத் தேர்தலுக்குப் பிறகு இந்த வாக்குறுதி என்னவாகும் என்று எண்ணிப் பார்க்கவும் முடியவில்லை. மக்கள் கொடுத்த அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதிலும் வாய்ச்சொல் வீரர்களாகவும் இருப்பதை நிறுத்திக் கொண்டு இனியாவது மக்கள் பிரதி நிதிகள் தங்கள் கடமையை உணர்ந்து செயல்படுவார்கள் என்று பினாங்கு வாழ் இந்து பெருமக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன் என்று ஐயப்பன் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்