தனது இரு பேரப்பிள்ளைகளுக்கும் பிறப்புப் பத்திரங்கள் இல்லாத காரணத்தால் இருவரையும் பள்ளிக்கு அனுப்ப முடியாமல் தவிக்கும் எம்.ரத்னம்மா இவ்விஷயத்தில் அரசியல் தலைவர்கள் அல்லது சமூகத் தலைவர்கள் உதவி செய்வார்களா என எதிர்பார்க்கிறார். பிறப்புப் பத்திரங்களை எடுப்பதற்கான முயற்சிகளை தாம் மேற்கொண்ட போதும் இன்னும் அதற்கான தீர்வு பிறக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார். 9, 7 வயதில் இரு பேரப்பிள்ளைகள் இருப்பதாக தெரிவித்த எம்.ரத்னம்மா பேரப்பிள்ளைகளின் பெற்றோர் தனது பிள்ளைகளை கைவிட்டு விட்டு எங்கு சென்றார்கள் என தெரியாத நிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக தனது அரவணைப்பில் வளர்வதாகவும் தெரிவித்தார். தாமதப்பதிவில் பிறப்புப் பத்திரத்தை எடுக்க முயற்சித்தப் போதும்அதற்கு இன்னும் வழி பிறக்கவில்லை என்ற அவர் தனது வறுமையான சூழ்நிலை யிலும் பேரப்பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும் என விரும்புவதாகவும் எம்.ரத்னம்மா தெரிவித்தார். இதனிடையே வசதி குறைந்தவர்களுக்கு உதவும் மனப்பாண்மையுடன் செயல்படும் ஜொகூர் பாரு யூனித்தார் அனைத்துலக பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழகத்தின்சமூக சேவைத் திட்டத்தின் வழி எம்.ரத்னம்மாவிற்கு வீட்டுக்கு தேவைப்படும் உதவிப் பொருட்களை வழங்கி உதவியுள்ளனர். திட்டத்திற்கு பொறுப்பேற்றிருக்கும் விரிவுரையாளர் நூர் அசிராபிந்தி இஸ்மாயில் தலைமையில் மாணவர் குழு இந்த உதவிகளை நல்கியது. எம். ரத் னம்மா குடும்பத்திற்கு வேறு வகையில் ஆதரவு கொடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும் எனவும் குழுவினர் தெரிவித்தனர். இதனிடையே குழுவினர் லீமா கெடாய் அடுக்குமாடி வீடுகளில் குடியிருக்கும் மேலும் மூன்று குடும்பங்களுக்கும் இதே போன்ற உதவிகளை நல்கினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்