மலேசியர்களில் புதிய தலைமுறையினர் மலாய் மொழியில் கட்டாயம் புலமை பெற்றவர்களாக இருக்கவேண்டும் என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் வலி யுறுத்தியுள்ளார். ஒருவரின் இன பின்னணி எத்தகையது என்பது எல்லாம் இங்கு கருத்தில் எடுத்துக் கொள்ள வேண்டியது இல்லை. தேசிய மொழியில் சீனர், இந்தியர் உட்பட அனைத்து இனங்களும் குறைந்தபட்சம் தேசிய மொழியில் பாண்டித்துவம் பெற்றிருக்க வேண்டும். தரமான தேசியமொழியில் உரையாடக் கூடியவர்கள் என்ற நிலையினை நாம் நிலை நாட்ட வேண்டும். தெளிவற்ற முறையில் பேசும் நிலையினை மலேசிய நடப்பு தலைமுறையினர் ஒரு போதும் கடைப்பிடிக்கலாகாது. புதிய தலைமுறையினர் சீனராக, இந்தியராக வேறு இனப்பிரிவினராக இருந்த போதிலும் தேசியமொழியில் நன்கு உரையாடக்கூடியவராக விளங்க வேண்டும். சீனப்பள்ளிக்கு சென்றாலும் சரி அல்லது தமிழ் பள்ளிக்கு சென்றாலும் சரி இவர்கள் பகாசா மலேசியாவில் நன்கு பேசக்கூடியவராக அவசியம் விளங்க வேண்டும். இத்தகைய இலக்கினை அடைவதற்கு நாம் பாடுபட வேண்டிய அவசியம் உள்ளது. இது நமது மொழி, நமது அடையாளம் சம்பந்தப்பட்ட விஷயம். யுகே எம் கலாச்சார மாநாட்டில் பிரதமர் உரையாற்றினார். மாநாட்டின் திறப்பு விழாவின் போது பிரதமரின் துணைவியார் டத்தின் ஸ்ரீ ரோஸ்மா மன்சோர், அர சாங்கத்தின் கலாச்சார ஆலோசகர் டான்ஸ்ரீ ரயிஸ் யாத்திமும் உடன் இருந்தனர். பகாசா மலேசியா, ஆங்கிலம் போன்ற மற்ற மொழிகளை பயன் படுத்துவதில் சமன்பாடு காண்பதில் சில சமயங்களில் பிரச்சினை என்பதனை பிரதமர் நஜீப் ஒத்துக் கொண்டார். இதர மொழிகளின் உபயோகத்தை அரசு ஒருபோதும் கட்டுப்படுத்தாது. இரண்டாவது, மூன்றாவது மொழிகளில் மக்கள் புலமை பெறுவதற்கு நாங்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவுகிறோம்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்