img
img

ஏமாந்தது போதும்! ஏமாற்றியதும் போதும்!
ஞாயிறு 16 ஏப்ரல் 2017 13:04:36

img

கடந்த 60 ஆண்டு காலமாக அரசாங்கத்தினை வழி நடத்தி வரும் தேசிய முன்னணி இது வரையிலும் மலேசிய இந்தியர் வியூக மேம்பாட்டுத் திட்டங் களை செயல்படுத்தாத கோரமும், மஇகாவின் பாணியி லான செயல்திட்டங்கள் எதுவும் இந்தியர்களைச் சென்றடை யாத நிலையில் 23.4.2017 ஆம் நாளில் அதிகாரப்பூர்வ மாக பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கால் அறிமுகப் படுத்தவிருக்கும் மலேசிய இந்தியர் செயல் திட்டம் (Malaysian Indian Blue Print - MIB - 2017) இலக்கினை எட்டுமா என்ற கேள்வியோடு ஏவுகணை பாய்கின்றது! மலேசிய இந்தியர்கள் இல்லா விட்டால் இப்போதைய மலேசியா தோன்றியிருக்காது எனும் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் சமீபத்தில் இந்தியா விற் கான அதிகாரப்பூர்வப் பயணத்தின்போது தெரிவித் திருப்பது நமது சமூகத்தின் உண்மையான பிரதிபலிப்பாக இருந்தாலும் சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் நிறைவடையப் போகும் சூழலில் தேசிய நீரோட்ட வளர்ச்சியிலிருந்து ஒடுக்கப்பட்ட இனமாகவும், ஒதுக் கப்பட்ட இன மாகவும் சுமார் 60% இந்தியர்கள் நிராதரவாக விடுபட்டுள்ளதை அறிந் தும் அறியாதவர்களாக உள்ள னரா என்ற கேள்வியை ஏவு கணை இங்கு பதிவு செய்கின்றது. 31.8.1957இல் சுதந்திரம் பெற்றது முதல் இன்று வரை மலேசிய இந்தியர்களிடையே காணப்படும் எண்ணிலடங்கா சமூகப் பொருளாதார இன்னல் களுக் காக நிவாரணம் தேடும் நடவடிக்கைகள் அறவே இல் லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய சமூகமாகப் பரிணாமம் பெற் றுள் ளோம் என்பதை யாராவது மறுக்க முடியுமா? மலேசிய இந்தியர்களின் ஒரே அரசியல் பிரதிநிதியாக அரசாங் கத்தின் அதிகாரப் பகிர்வின் வழி சட்ட மன்றம் மற்றும் நாடாளு மன்றப் பதவிகளை அலங்கரித்து வந்திருக்கும் மஇகாவின் வழி நீண்ட கால அடிப்படையிலான செயல் வரைவுத் திட்டம் டான்ஸ்ரீ மாணிக்கவாசகத்தின் தலைமைத் துவத்தின்போது டத்தோ வீ.பத்மநாபனால் உருவாக்கப் பட்டதை செயல் படுத்துவதி லிருந்து விடுபட் டுப் போன துயரத்திற்கு யாராவது தீர்வு கண்டார்களா? எரிகின்ற வீட்டில் பிடுங்கினது லாபம் என்பதன் அடிப்படையி லேயே மஇகாவின் செயல்பாடு கள் இருந்ததை யாராவது மறுக்க முடியுமா? மலேசிய இந்தியர் செயல் வரைவுத் திட்டம் 2013: 18.4.2013ஆம் நாள் மலேசிய இந்தியர்களின் வரலாற்றில் முதன் முறையாக அரசியலுக்கு அப்பாற்பட்ட நிலையில் மலே சிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார பின்னடைவுகளி லிருந்து மீட்பதற்கான செயல் வரைவுத் திட்டத்தினை (Blue Print) வரைந்திருந்த ஹிண்ட்ராப் இயக்கத்துடன் புரிந்துணர்வு (Memoran dum of Understanding - mou) ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடும் வைபவம் பேரள விலான ஏற்பாடு களோடு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தலைமையில் தேசிய முன்னணியின் செய லாளர் டத்தோஸ்ரீ தெங்கு அட் னான் தெங்கு மன்சூர் மற்றும் ஹிண்ட்ராப் இயக்கத்தின் தலைவரான பொ.வேதமூர்த்தி கையெழுத்திட்ட சம்பவம் பிரிக் பீல்ட்ஸ் விவேகானந்தா தமிழ்ப் பள்ளியின் கந்தையா அரங்கினில் நடந்தேறியதை ஏவுகணை நினைவுபடுத்து கின்றது. மக்கள் கூட்டணியின் தலை மைத்துவத்திடமிருந்து எதிர்பார் த்த ஆதரவினை தேசிய முன் னணி மலேசிய இந்தியர்களின் நலன்களுக்காக ஏற்றுக் கொள் கின்றது என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய மேற் கண்ட சம்பவத்திற்கு ஆயுட் காலம் வெறும் பத்து மாதங்களே என்ற கவலையான ஏமாற் றகரமான செயல்களுக்குப் பின்னால் துணையாக இருந்தவர்கள் யார் என்பதை மலேசிய இந்தியர்கள் அறிந்து கொள்ள ஆவலாய் இருக்கின்றார் கள். ஹிண்ட்ராப் பரிந்துரை செயல்திட்டங்களை அமல்படுத்தாமல் கைவிட்டு விட்ட தேசிய முன்னணியின் செயல் வரலாற்றில் இருந்து அழிக்கப்படாது. மாறாக, இந்தியர் களுக்கான சமூகப் பொருளாதார மேம்பாட்டு வரைவு திட்டத் தினை செயல்படுத்தாமல் இருப்ப தற்குத் தோள் கொடுத்தது. * மஇகாவின் தலைவர்கள்! * கல்வி மையங்களின் ஆலோசகர்கள் * உதிரிக் கட்சிகளின் தலை வர்கள் * அரசு சாரா இயக்கங்களின் தலைவர்கள் * அரசாங்கத்தோடு பின்னிப் பிணைந்திருக்கும் தனிநபர்கள். ஆகியோரின் சமூகத் துரோகச் செயல் நிச்சயம் ஒரு நாள் அம்பலத்திற்கு வரவேண்டும் என ஏவுகணை பிரார்த்தனை செய்கின்றது. தேர்தல் இனிப்புகளாக மாறிவிடுமா?: மலேசிய இந்தியர்களின் அரசியல் பிரதிநிதிகளாகவும், அரசு சாரா இயக்கங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் அறவாரியங்களின் பொறுப்பாளர்களாகவும் தேசிய நிலையில் செயல்படும் கல்வி நிலையங்களின் நடத்துனர்களாகவும் தனி நபர்களாகவும், எதிர்க் கட்சியின் இந்தியர் அரசியல் பிரதிநிதிகளாகவும் செயல்படுகின்றவர்களில் ஒருவர்கூட 18.4.2013ஆம் நாளில் பிரதமர் வாக்க ளித்திருந்த மலேசிய இந்தியர்களுக்கான ஐந்தாண்டு செயல்வரைவு திட்டம் தோல்வியடைந்ததற்கு எதையுமே கூறாமல் மௌனிகளாவதற்கான உட் பொருளை மலேசிய இந்தியர்கள் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொண்டிருப்பார்கள் என ஏவுகணை ஊகிக்கின்றது. இதற்கிடையே, வரும் 23.4.2017 ஆம் நாள் மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் மலேசிய இந்தியர்களின் செயல் வரைவுத் திட்டத்தினை (Malaysian Indian Blue Print - MIB) அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற் கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதை ஏவுகணை அறிந்துள்ளது. மலேசிய இந் தியர்களின் சமூகப் பொருளாதார இன்னல் களைக் களைவதற்கு 60 ஆண்டுகளுக்குப் பின்னராவது நிரந்தரமான மேம்பாட்டுத் திட்டங்கள் தேவை என்பதை உணர்ந்திருக் கும் தேசிய முன்னணியின் செயல்பாடுகளில் ஓரளவு முன் னேற்றம் ஏற்பட்டுள்ளது என்றா லும் செயல் வரைவு திட்டத்தின் அறி விப்பு எதிர்வரும் 14ஆவது பொதுத் தேர்தலுக்கான இனிப்பு வழங்கும் வைபவமாக மாறிவிடுமே என்ற அச்சம் ஏவுக ணைக்கு மட்டுமல்லாமல் சமூகப் பொருளாதார ரீதியில் நலிவடைந்து சுக்கல் நூறாகச் சிதறிக் கொண்டிருக்கும் 60% இந்தியர்களிடையேயும் தோன்றியுள்ளதை யாராலும் மறுக்க முடியாது. வெறும் வார்த்தைகளாலும் அறிவிப்புச் சடங்குகளாலும் இந்தியர்களிடையே காணப்படும் சமூகப் பொருளாதார இடைவெளியினைக் குறைத்துவிட முடி யாது. மேலும் பிற சமூகங் களைவிட மலேசிய இந்திய சமூகப் மிகப் பெரிய பொருளாதார இடைவெளியைக் கொண்டிருப்பதை (Economical Gap) யாருமே மறைத்துவிடவும் முடி யாது. ஆக, மலேசிய இந்தியர் களின் வரலாற்றுப் பூர்வமான தியாகங்களை அரசாங்கம் மதிக்கும் பட்சத்தில் அறிவிக்கப் படவிருக்கும் மலேசிய இந்தியர் செயல்வரைவு (MIB) வாழை, இரண்டு முறை குலை தள்ளிய சம்பவமாக மாறிவிடக் கூடாது என ஏவு கணை கேட்டுக் கொள்கின்றது. தேர்தல் இனிப்பு களால் கடந்த 60 ஆண்டுகளாக தேரோட்டத்திற்கு இட்டுச் செல்லப்பட்டிருக்கும் இந்திய சமூகத்திற்கு விடியல் வேண் டும் என்பதுதான் ஏவுகணை யின் வேட்கையாகும். மஇகாவின் அரசியல் நகர்விற்கான முயற்சியா?: மலேசிய இந்தியர்களின் 60 ஆண்டுகால சமூகப் பொருளா தார இன்னல்களுக்கு வடிகால் அமைத்ததே மலேசிய இந்தியர் களின் அரசியல் பிரதிநிதித் துவத்தின் பலவீனமே என்பதை ஏவுகணை பலமுறை வலியுறுத் தியுள்ளது. மலேசிய இந்தியர் களின் இன்றைய மிகவும் பின்தங்கிய அடைவு நிலைக்கு மஇகாவின் வழி மேற்கொள் ளப்பட்ட அனைத்து திட்டங் களும் விழலுக்கு இறைத்த நீரான கதைதான் என்பதை விவ ரிக்க வேண்டியது இல்லை. *மானியங்கள் முழுமையான பயனை ஏற்படுத்தவில்லை. * செயல் திட்டங்கள் இலக்கினை அடையவில்லை. * அரசியல்வாதிகளின் தலையீடுகள் தோல்வியையே ஏற்படுத்தியுள்ளது. * அடைவு நிலையில் (Delivery Mechanism) மிகப் பெரிய சறுக்கல்! * மானியங்களை தவறாகப் பயன்படுத்திய சம்பவங்கள் என மஇகாவின் செயல் பாடுகளுக்கு மத்தியில் மேற் கண்ட மலேசிய இந்தியர் செயல் வரைவு திட்டத்தினை மஇகாவின் வழியாக செயல் படுத்துவது தேசிய முன் னணிக்கு மிகப் பெரிய பின் னடைவை ஏற்படுத்திவிடுமா என்பதை நாளை ஆராய்வோம்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img