2008 ஆம் ஆண்டிலிருந்து பினாங்கு மாநில அரசாங்கத்தினை வழிநடத்தி வரும் மக்கள் கூட்டணியின் அரசாங்கம் கடந்த 50 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஏன் செய்ய வில்லை என்ற அதே பல்லவியை 8 ஆண்டுகள் கடந்த பின்னரும் பாடி வருவது முறையா என்ற கேள்வியை பினாங்கு மக்கள் இந்தியர்களின் சார்பில் நண்பன் குழு கேட்க விரும்புகின்றது. பினாங்கு மாநில பகுதிகள் இரண்டு பிரிவுகளாக உள்ளதை பூகோளப் பாடத்தின் வழி அனைவரும் அறிந்துள்ளோம். தீவுப்பகுதி (Penang Island) முதன்மை நிலப்பகுதி (Penang Main Land) என அமைந்திருக்கும் இரண்டு பகுதிகளிலும் பல்லாயிரக்கணக்கான இந்தியர்கள் வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றான இந்துக்களுக்கான சுடுகாடு, இடுகாடு மற்றொன்று ஈமச் சடங்குகளை செய்வதற்கான நீச்சார்ந்த நிலப்பகுதி என் பதை மாநில அரசாங்கம் உணர்ந்திருந்தும் பினாங்கு மாநிலத்தில் அமைந்திருக்கும் இரண்டு நிலப்பகுதிகளிலும் முறையான ஈமச்சடங்குகளை செய் வதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட வில்லை என்ற கோரிக்கையினை நண்பன் குழு அரசியல் நோக்கமில்லாமலேயே முன்னெடுத்துள்ளதை அனை வரும் அறிவீர்கள். இதற்கிடையே இவ்விவகாரம் தொடர்பில் உண்மையான விவரங்களை அறிந்து கொள்ள வேண்டிய இவ்விவகாரத்தினை முக்கியப்படுத்தியிருக்கும் நண்பன் குழுவிற்கு மேலும் சில விளக்கங்களை தகுதி வாய்ந்தவர்கள் கூறுவார்களா? * முதன்மை நிலப் பகுதியில் இந்துக்களுக்கான ஈமக்காரியங்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் எங்கே எனக் கூற முடியுமா? * ஏற்கெனவே முதன்மை நிலப்பகுதியில் வழங்கப்பட்ட 2 ஏக்கர் நிலம் என்னவானது? * பினாங்கு தீவுப் பகுதியில் ஈமக்காரியங்களைச் செய்வதற்கு இராமர் கோவிலில் இடம் ஒதுக்கப்பட்டுள்ளதா? * அவ்வாறு ஒதுக்கியிருந்தால் நீர் பகுதியே இல்லாத அவ்விடம் தேவையை நிறைவு செய்யுமா? * பினாங்கு வாழ் இந்துக்களின்அடிப்படை தேவையாக ஈமக்காரியங்களுக்கான வசதியை கேட்டுத்தான் பெற வேண்டுமா? * தேசிய முன்னணி செய்யவில்லை நாங்கள் மட்டும் ஏன் செய்ய வேண்டும் என்பது நியாயமா? * பினாங்கு மாநில இந்தியர்களின் வாக்குகளுக்கு மதிப்பே கிடையாதா? போன்ற கேள்விகளுக்கு நியாயமான பதிலை தகுதி வாய்ந்தவர்களுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதே நண்பன் குழுவின் கோரிக்கையாகும். இவ் விவகாரத்தினை அரசியல் பின்னணியில் நண்பன் குழு நோக்கவில்லை மாறாக பினாங்கு மாநிலத்தில் உயிர் நீத்திருக்கும் இந்துக்களின் ஆத்மாவின் பய ணத்திற்கு சரியான இடம் அமைக்கப்பட வேண்டும் என்ற நோக்கமே உள்ளதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்