நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று தாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும் வற்புறுத்தியதே இல்லை என்று துணைப் பிரதமர் டத் தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி நேற்று திட்டவட்டமாக தெரிவித்தார். அதற்கு மாறாக மலேசியாவைப் போன்ற பல்லின சமுதாயத்தில் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கு தாய்மொழிப் பள்ளிகளின் பாடத்திட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாக ஜாஹிட் கூறினார். தேசியக் கல்விக் கொள்கை தொடக்கப்பள்ளிகளில் தாய்மொழி ஊக்குவிக்கப்பட வேண்டும் என்று தெளிவாக கூறுகிறது. ஆனால், தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கான ஒன்றுபடுத்தப்பட்ட பாடத்திட்டத்தை அது கொண்டிருக்க வேண்டும் என்று கோலகங்சாரில் ஜாஹிட் செய்தியாளர்க ளிடம் இதனை கூறினார். நேற்று முன்தினம் கோலாலம்பூரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், தொடக்கப்பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளி வரையில் பல மொழிகளில் கற்பித் தல் அமைவுமுறை இருப்பது தேசிய ஒற்றுமை இலட்சியத்தை அடைவதற்கு ஓரளவு தடங்கலாக இருக்கிறது என ஜாஹிட் கூறியதாக செய்தி வெளி யிடப்பட்டிருந்தது. அது பற்றி கேட்ட போது, தாய்மொழிப்பள்ளிகளை மூட வேண்டும் என்று நான் என்றுமே வற்புறுத்தியதில்லை. எனது அறிக்கைக்கு தவறான அர்த்தம் கொடுக்காதீர் என்று ஜாஹிட் நினைவுறுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்