இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களான மாமாக் உணவகத்தினர் தாங்கள் விற்பனை செய்யும் ரொட்டி சானாய் மற்றும் தே தாரேக்கிற்கு அதி கமாக விலை நிர்ணயிப்பதாக கூட்டரசு பிரதேச அமைச்சர் டத்தோஸ்ரீ தெங்கு அட்னான் மன்சோர் நேற்று கடிந்துக்கொண்டார். சீனிக்கு உதவித் தொகை யாக கிலோவிற்கு 34 காசு குறைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில உணவக உரிமையாளர்கள் இன்னமும் தே தாரேக்கிற்கு ஒரு கிளாசுக்கு 50 காசு கூடுதலாக கட்டணம் நிர்ணயிக்கிறார்கள் என்று அவர் குறிப் பிட்டார். உண்மையிலோ ஒரு கிளாஸ் தே தாரேக்கிற்கு ஒரு கிலோ சீனியா கலக்கிறீர்கள்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் என்று துங்கு அட்னான் கேட்டுக்கொண்டார். இதேபோன்று கோதுமைமாவு மற்றும் எண்ணெய்க்கும் உதவித் தொகை வழங்கப்படுகிறது. அப்படியிருந்தும் எதற்காக ரொட்டி சானாய் விலை அந்த அளவிற்கு விலை ஏற்றம் கண்டுள்ளது என்று அவர் வினவினார். கண்மூடித்தனமாக லாபத்தை சம்பாதிக்காதீர்கள். அது ஹராம் ( சட்டவிரோதமானது) என்று நேற்று இங்கு மலேசிய இந்திய முஸ்லிம் காங்கிரஸான கிம்மாவின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்து உரையாற்றுகையில் தெங்கு அட்னான் இவ்வாறு கூறினார். அவர் இவ்வாறு கூறிய போது கிம்மா உறுப்பினர்கள் பலத்த கைத்தட்டல் வழங்கினர்.ஆதாயத்தை தேடுவதை நீங்கள் நோக்கமாக கொள்வீர்கள் என்றால் நீங்களும் எதிர்க்கட்சிகளைப் போல் ஆகிவிடுவீர்கள். பிறகு உங்களுக்கும் எதிர்க்கட்சிக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆகி விடும் என்றார் அவர். சீனி விலை கிலோவிற்கு 20 காசு மட்டுமே உயர்ந்து இருக்கும் போது ஒரு கிளாஸ் தே தாரேக்கிற்கு நீங்கள் கூடுதலாக 50 காசு கட்டணத்தை உயர்த்துவது பகுத்தறிவுக்கு எட்டக்கூடிய காரியமா? இவ்வாறு கூடுதலாக விற்பனை செய்வது அபத்தமானதாகும். நீங்கள் விலையை உயர்த்தி எங்களை சாகடிக்கிறீர்கள் என்றார் அமைச்சர் உணர்ச்சி வசப்பட்டவராக.இந்த விலை உயர்வுதான் கோதுமைமாவு, சமையல் எண்ணெய் மற்றும் இதர பொருள்களிலும் விலை உயர்வு எதிரொலிக்கிறது. நீங்கள் விலையை உயர்த்தவில்லை என்பதை மறுக்க முடியுமா? கூடுதல் பட்சமாக அதிக விலைக்கு உணவுப்பொருள்களை விற்பனை செய்வது ஹராமாகும் என்று அம்னோ பொதுச் செயலாளருமான தெங்கு அட்னான் தெரிவித்தார்.தற்போது நகரங்களில் வாழ்கின்றவர்கள் வாழ்வாதாரத்திற்காக ஒவ்வொரு நாளும் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இதில் உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருள்களை விலையை உயர்த்தி நிலைமையை மேலும் மோசமாக்குகிறார்கள். பிறகு அரசாங்கம்தான் இவ்வாறு செய் கிறது என்று எதிர்க்கட்சியினர் தவறாக முத்திரை குத்தி விடுகின்றனர் என்றார் அவர். உணவக உரிமையாளர்கள் உணவுப்பொருள்களை அதிக விலைக்கு விற்க வேண்டாம் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். மக்களின் சுமையை குறைக்க அரசாங்கத்திற்கு உதவி செய்யுங்கள் என்று தெங்கு அட்னான் இந்திய முஸ்லிம் உணவக உரிமையாளர்களை கேட்டுக்கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்