சுபாங் ஜெயா, மே 30- நாட்டில் விஸ்வரூபம் எடுத்துள்ள ஹூடுட் சட்ட மசோதா விவகாரம் தொடர்பில் அத்திட்டம் அமலுக்கு வந்தால் தன் அமைச்சர் பதவியை துறப்பதாக சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஹூடுட் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால் மசீச தலைவரும் கெராக்கான் கட்சியின் தலைவரும் அமச்சர் பதவிகளை ராஜினாமா செய்யப் போவதாக அறிவித்திருந்தனர். அந்த வகையில் இந்திய சமுதாயத்தின் தாய்க்கட்சியான மஇகாவும் இந்த விவகாரம் தொடர்பில் கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறது. பல இன மக்கள் வாழும் இந்த நாட்டில் இதுபோன்ற சட்டங்கள் அமலுக்கு கொண்டு வருவது ஏற்புடையதல்ல. மேலும் இதுபோன்ற சட்ட மசோதா அமல்படுத்துவதற்கு நாட்டின் சட்ட திட்டத்திலும் இடம் இல்லை. அதுமட்டுமின்றி பல இன மக்களின் கலாச்சாரம் கலந்த நாடாக மலேசியா திகழ்வதனால்தான் பல உலக நாடுகள் மலேசியாவில் முதலீடு, வணிகம், சுற்றுலா போன்றவற்றை மேற்கொள்கின்றன. ஆகையால் இந்த புதிய அமலாக்கம் இங்குள்ள மக்கள் மத்தியில் அதிருப்தியை விளைவிப்பதுடன் உலக நாடுகள் மலேசியாவின் மீது வைத்துள்ள கண்ணோட்டத்தையும் மாற்றிவிடும் என்பது திண்ணம். நேற்று காலை ஓன் சிட்டி மோலிலுள்ள மண்டபத்தில் மஇகாவின் தேசியப் பொது பேரவை நடைபெற்றது. இந்த பேரவைக்கு தலைமை ஏற்ற டாக்டர் சுப்பிரமணியம் மேற்கண்டவாறு கூறினார். தற்போது நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சட்ட மசோதா ஹூடுட் சார்ந்ததில்லை என பிரதமர் அண்மையில் தெரிவித்திருந்தார். ஆகையால் இந்த விவகாரம் தொடர்பில் தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சிகளான மஇகா, மசீச, கெராக்கான் ஆகிய கட்சிகளுடன் பிரதமர் கலந்து ஆலோசிக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பில் அவர் தெளிவான விளக்கத்தையும் வழங்க வேண்டுமென அவர் தெரிவித்தார். ஹூடுட் சட்டம் அமலுக்கு வந்தால் மஇகா தேசிய முன்னணியிலிருந்து விலகுமா என்ற கேள்வியை பத்திரிகையாளர்கள் எழுப்பியதற்கு அது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என அவர் பதிலளித்தார். அதுமட்டுமின்றி நீங்கள் மட்டும் அமைச்சர் பதவியை துறப்பீர்களா அல்லது மஇகாவைச் சேர்ந்த மற்ற இரு துணையமைச்சர்களும் பதிவியை ராஜினாமா செய்வார்களா என்ற வினாவிற்கு அது அவர்களின் கையில்தான் உண்டு என்றார் சுப்ரா. மஇகாவின் சிறப்பு தேசியப் பேரவையில் தொகுதித் தலைவர்களும் கிளைத்தலைவர்களும் கலந்து கொண்டதுடன் தேசியத் தலைவருக்கு முழு ஆதரவு நல்கினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்