ஆசிய விளையாட்டுப் போட்டியில் இருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றவரும் மலேசிய ஜுனியர் கராத்தே குழுவின் பயிற்சியாளருமான ஆர். புவனேஸ்வரன் தாய்லாந்து கராத்தே குழுவுக்கு பயிற்சியாளராக பொறுப் பேற்றுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் வரையில் புக்கிட் ஜாலிலில் மலேசிய ஜூனியர் கராத்தே குழுவுக்கு புவனேஸ் வரன் பயிற்சி அளித்து வந்தார். அடுத்த ஆகஸ்டில் கோலாலம் பூரில் நடக்கவிருக்கும் சீ விளை யாட்டுப் போட்டியை முன்னிட்டு தனது கராத்தே குழுவுக்கு அவரைப் பயிற்சியாளராக தாய்லாந்து நியமித்துள்ளது. கடந்த ஜனவரியிலேயே தாய்லாந்து தம்மை அணுகிய தாகவும் எனினும், கடந்த வாரம் தான் அந்தப் பொறுப்பைத் தாம் ஏற்றுக் கொண்ட தாகவும் புவ னேஸ்வரன் தெரிவித்தார். எனக்கு இதுவொரு புதிய சவால். ஒரு தேசிய குழுவுக்குப் பயிற்சி அளிக்கும் திறன் தமக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்கத் தமக்கு ஒரு வாய்ப்புக் கிடைத் திருப்பதாக அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்