img
img

அக்டோபரில் பொதுத் தேர்தல்!
சனி 15 ஏப்ரல் 2017 15:24:51

img

நாட்டின் மிகவும் பரபரப்பான 14-ஆவது பொதுத் தேர்தல் வரும் அக்டோபர் மாதம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி உட்பட தேசிய முன்னணி உறுப்புக் கட்சிகளின் தலைவர்களும், மாநில மந்திரி புசார்கள், மாநில முதலமைச்சர்கள் ஆகியோர் அண்மையில் பகாங், ஜண்டா பாயிக்கில் உள்ள பயிற்சி மையத்தில் நடைபெற்ற ஒரு சிறப்பு பயிற்சியில் கலந்து கொண்டது இதனை நிரூபிக்கும் வகையில் உள்ளது. கடந்த ஏப்ரல் 7ஆம் தேதி தொடங்கி 3 நாட்களுக்கு நடைபெற்ற அப்பயிற்சியில் மாநில அளவில் தேசிய முன்னணியின் நிலை குறித்து ஆழமாக ஆய்வு செய்யப்பட்ட தாகவும் தெரிகிறது. வரும் பொதுத் தேர்தலில் சிலாங்கூர் மாநிலத்தை கைப்பற்றுவதில் தேசிய முன்னணி நம்பிக்கை கொண்டுள்ளது.எனி னும், பினாங்கு மாநிலத்தில் இதற்கான வாய்ப்புகள் சாதகமாக இல்லை என்பது அந்த ஆய்வின் வழி கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக அறியப்படுகிறது. கடந்த காலங்களில் பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்பு தேசிய முன்னணி இதுபோன்ற பயிற்சியை நடத்தி பல்வேறு ஆய்வுகளை நடத்தி வருவது வழக்கமான நடைமுறையாகும். அப்பயிற்சியில் கலந்து கொண்ட மாநில மந்திரி புசார்க ளும், முதலமைச்சர்களும் தங்கள் மாநிலங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து விளக்கம் அளித்ததாகவும் தெரிகிறது. ஒவ்வொரு மாநிலங்களிலும் உள்ள நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளில் எந்த இடங்களில் தேசிய முன்னணி வெற்றி பெறலாம் போன்ற தக வல்கள் உட்பட, அத்தொகுதிகளில் தேசிய முன்னணிக்கு உள்ள பலம், பலவீனங்கள் குறித்தும் விளக்கம் அளித்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. தற்போது எதிர்க்கட்சிக ளிடையே ஏற்பட்டுள்ள மோதல் அல்லது விரிசலை தங்களுக்கு சாதமாக பயன்படுத்தினால் சிலாங்கூர் மாநிலத்தை தேசிய முன்னணி மீண்டும் கைப்பற்றிவிட முடியும் என கொள்கை அளவில் ஒப்புக் கொள்ளப்பட்டதாகவும் தெரிகிறது. அக்கூட்டத்தில் பொதுத் தேர்தலுக்கான தேதி குறித்து பிரதமர் அறிவிப்பு எதையும் செய்யவில்லை என்றாலும், அக்டோபர் தொடக்கத்தில் தேர்தல் நடை பெறலாம் அல்லது அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்படலாம் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img