பினாங்கு மாநிலத்தில், தேசிய முன்னணி ஆட்சியின் கீழ் ம.இ.கா. செயல்படுத்திய தில்லாலங்கடிகளால் இங்கு இறந்துபோன இந்துக்களுக்கு காரி யங்களை செய்வதற்கு நிரந்தரமான ஓர் இடம் இல்லாமல் போன அதே சமயம், மக்கள் கூட்டணி கடந்த இரு தவணைகளாக பினாங்கில் ஆட்சி புரிந்து வருகின்ற நிலையில் இப்போதும் அதே அவலத்தில்தான் பினாங்கு இந்துக்கள் வாழ்கின்றனர். சுமார் 50 ஆண்டுகளாக தேசிய முன்னணியின் ஆட்சியின்போது பினாங்கு மாநிலத்தில் மஇகா-வின் கை ஓங்கி இருந்ததை மறுக்க முடியாது. ஆனால், அந்த செல்வாக்கு சுயநல லாபத்திற்காக மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. மாறாக, பினாங்கு மாநிலத்தில் வாழ்ந்து இறந்துபோன இந்துக்களுக்குச் செய்யப்பட வேண்டிய கருமக் காரியங்களுக்காக நிரந்தரமான ஓர் இடம் அவ சியம் என்பதை அவர்கள் உணர மறந்து விட்டனர்.அதுதான் போகட்டும், 2008-ஆம் ஆண்டில் அரசியல் சுனாமியால் பினாங்கு மாநிலத்தை மக்கள் கூட்டணி கைப்பற்றிய பிறகு, கடந்த இரண்டு தவணைகளாக மாநில அரசாங்கத்திடமிருந்து மக்கள் எதிர்பார்த்த இந்த தேவை இன்னும் பூர்த்தி செய்யப் படாமல் இருப்பதும், இறந்து போன இந்துக்களின் இறுதி யாத்திரைகளுக்கான சடங்குகளை செய்வதற்குக் கூட நிரந்தரமான இடமில்லாமல் அல்லா டுவதும் நியாயமா? என்ற கேள்வியை நண்பன் குழு முன் வைக்கின்றது. இன ரீதியிலான அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டதாகக் கூறி பினாங்கு மாநில இந்தியர்களின் அடிப்படை உரிமைகளில் ஒன்றான கருமக் காரி யங்களைக் கூட நிம்மதியாகச் செய்ய விடாமல் செய்திருப்பது நியாயமா? ஏற்கெனவே, இந்துக்களின் கருமக்காரியங்களைச் செய்வதற்காக ஐந்து ஏக் கர் நிலம் மாநில அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்றும், ஒதுக்கீடு செய்யப்பட்ட அந்த நிலப்பகுதி பிறகு இரண்டு ஏக்கராகக் குறைக்கப்பட்டதா என்பதும் மாநில அரசாங்கம் பதில் சொல்ல வேண்டிய கேள்விகளாகும். பந்தாய் பெர்சேவில் ஈமச் சடங்குகள்: தற்போது பினாங்கு வாழ் இந்துக்கள், இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை பட்டர்வொர்த் நகருக்கு அருகில் உள்ள 'பந்தாய் பெர்சே' எனும் கடற்கரைப் பகுதியில் செய்து வருவதாக நண்பன் குழுவிற்குக் கிடைத்த தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன. எனினும், இதுவும் நிரந்தரமான இடம் கிடையாது. இதனால் எழுந்துள்ள பல்வேறு சிக்கல்களை இங்குள்ள இந்துக்கள் எதிர்நோக்க வேண்டியிருப்பதை பினாங்கு மாநில அரசாங்கம் அறிந்துள்ளதா? நாடு சுதந்திரம் அடைந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டதை நாம் பெருமையுடன் கூறிக்கொள்கிறோம். ஆனால், ஈமக் காரியங்களை செய்வதற்குக் கூட பினாங்கு மாநிலத்தில் இந்துக்களுக்கு உரிமை இல்லையா? அதற்கு நிரந்தரமான இடம் இல்லையா? மற்ற மாநிலங்களில் இல்லாத ஒரு சலுகை பினாங்கில் உள்ளது. அதுதான் பினாங்கு மாநிலத்தின் 'இந்து அறப்பணி வாரியம்' . இவ்விவகாரம் தொடர் பில் இந்த அறப்பணி வாரியம் ஏன் இன்று வரை சரியான தீர்வினைக் காண முடியவில்லை என்பதற்கான விளக்கம் கிடைக்குமா? பாரம்பரிய கிராமமாக 'கம்போங் புவா பாலா'வை ஏற்கெனவே நாம் பறிகொடுத்து விட்டோம். பினாங்கு மாநில இந்தியர்கள் ஈமக்கிரியைகள் செய்யும் உரிமையையும் இழக்கத்தான் வேண்டுமா? இந்த கேள்விக்குப் பதில் கிடைக்குமா?
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்