ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளிபரப்பப்படும் சின்னத் திரை மெகா சீரியல்கள் ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தை சீரழித்து வருவதால் நடைமுறை உண்மைகளுக்குப் புறம்பாக இருக்கும் சின்னத்திரை, சீரியல்களை மலேசிய திரைப்பட தணிக்கை வாரியம் உடனடியாகத் தடைசெய்ய வேண்டும் என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. ஒருவர் சர்வ சாதாரணமாக எத்தனை கொலைகளைச் செய்து அவர்களின் உள் உறுப்புகளை திருடுவது, போலீசாரின் கண்களில் சர்வ சாதாரணமாக மண்ணைத் தூவுவது, பெண் கொலைகாரிகளை சமுதாயத்தில் பெரிய அந்தஸ்துள்ளவர்களைப் போல் காட்டுவது, சமூக விரோதிகளை போலீசார் எளி தில் அடையாளம் கண்டும் அவர்களைத் தப்பிக்கச் செய்வது போன்று காட்டுவது போன்ற அபத்தங்கள், மது அருந்துவது சிகரெட் புகைப்பது போன்ற காட்சிகள் சர்வ சாதாரணமாக இடம் பெற்று வருகின்றன என்று பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் கல்விப் பிரிவு அதிகாரி என்.வி. சுப்பாராவ் கூறு கிறார். இங்குள்ள நமது இந்திய பெண்கள் சமுதாயத்தை வெகுவாக பாதித்துள்ளது. தற்போது பெண்கள் தங்கள் காதலர்கள் அல்லது கணவன்மார்களை வாடா போடா என்று அழைப்பதும் சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும் விவாகரத்து கோரி நிற்பதும் சர்வ சாதாரணமாகக் காண முடிகிறது என்றார் அவர். இத்தகைய அபத்தமான மெகா சீரியல்களை அனுமதிக்கும் மலேசிய திரைப்பட சின்னத்திரை தணிக்கை வாரியம் உண்மையிலேயே செயல்படுகிறதா என்றும் பல ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்கள் கேள்வி எழுப்பி வரு கின்றனர்.சின்னத்திரை மெகா சீரியல்கள் இந்திய சமுதாயத்தினரிடையே ஒழுக்கக் கேட்டைத்தான் கற்பித்து வருகின்றன என்றால் மிகையாகாது. இது தொடருமேயானால் இந்திய சமுதாயத்தில் பெரும் பாதிப்புதான் ஏற்படும் என்றும் சுப் பாராவ் எச்சரித்தார். இந்திய சமுதாயத்தின் பாரம்பரியம் சமூக கடப்பாடுகள், சமய நம்பிக்கைகள் இதனால் பெரிதும் பாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்