நேரம் தவறாமையினை வலியுறுத்தும் வண்ணம் கோங் பாடாங் காம்ப்ளக்ஸ் தேசிய பள்ளியின் மாணவர்களுக்கு நேர பதிவுமுறை அமல்படுத்தப் பட்டுள்ளது. காலம் தவறாமை மற்றும் நேரத்தை முறையாக நிர்வகிக்கும் கலாச்சாரத்தை மாணவர்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்ற கருத்தினை வலுப்படுத்தும் வண்ணம் இந்த நேரப் பதிவு முறை கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கமானது இத்தகைய நடவடிக்கையினை பரிந்துரை செய்துள்ளது. நேரத்தை நிர்வகிப்பதில் மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நிலவவேண்டும். மாணவர்களுக்காக ஆறு நேர பதிவு முறை இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன என்று திரெங்கானு மாநிலக் கல்வி இயக்குநர் ஷாப்ருடின் அலி உசேன் தெரிவித்தார். இந்த வருகை பதிவு முறை காரிய சாத்தியமான ஒன்று. நேரத்தோடு பள்ளிக்கு வருகிறார் களா இல்லையா என்பது இந்த வருகை பதிவு முறை அவர்க ளுக்கு உணர்த்தும். இது கட்டாயமான முறை அல்ல. எனினும் இதர பெற்றோர் ஆசிரியர் சங்கங்களிடமிருந்து போதிய ஆதரவும் ஒத்துழைப்பும் கிட்டு மானால் மற்ற பள்ளிகளும் இதனை பின்பற்றுவதற்கு நாங்கள் ஆக்கமும் ஊக்கமும் தந்து உதவுவோம். மாவட்டத்தில் இதர பள்ளிகளும் இத்தகைய வருகை தரும் முறையினை பின்பற்றும் என்று மாநில கல்வி இயக்குநர் ஷாப்ருடின் எதிர்பார்க்கிறார். இப்பள்ளியில் 821 மாணவர் கள் பயில்கிறார்கள் என்று பள்ளி யின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் முகமட் ஷாம்ஷானி தெரிவித்தார். நேரம் பதிவு முறைக்காக இயந்திரங்களை பொருத் துவதற்கு ஏறத்தாழ ஆறாயிரம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்