கிள்ளான் பொது மருத்துவமனை செயல்படக்கூடிய சிசிடிவி கேமராக்களை கொண் டிருக்க வில்லை என்ற வாதம், லாரணியா வில்பெர்ட் விவகாரத் தில் எழுப்பப்பட்டிருக்கக் கூடாது என்று சுகாதார (மருத் துவம்) துணை தலைமை இயக்குநர் டாக்டர் ஜெயந்திரன் சின்னதுரை நேற்று கூறினார். மருத்துவமனைகளில் குறிப்பாக அவசரப்பிரிவுகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டியது கட்டாயமல்ல என்று அவர் குறிப்பிட்டார். மருத்து வமனைகளில் சிசிடிவி கேமராக்களை பொருத்துவது எஸ்ஓபி நடைமுறையில் ஒரு கூறு அல்ல. மருத்துவமனை களில் சிசிடிவி கேமராக்கள் கண் டிப்பாக பொருத்தப்பட்டிருக்க வேண்டு மென நீங்கள் கூற முடியாது. இது கட்டாயமல்ல. நமது மருத்துவ மனைகளில் பெரும்பாலானவற் றில் சிசிடிவி கேமராக்கள் இல்லாத நிலையில் அவர்கள் ஏன் இந்த அறிக்கையை வெளியிட் டார்கள் என்பது எனக்கே தெரியவில்லை என்றார் அவர். சிசிடிவி கேமராவை பொருத்தி இருப்பது, சில சமயங்களில் நோயாளிகளின் அந்தரங்க அல் லது தனிப்பட்ட விஷயங் களில் தலையிடுவதை போன்று அமைந்து விடும். அவசரப் பிரிவுகளில் சிசிடிவி கேமராக்கள் இருக்க வேண்டியது கட்டாயமல்ல என நான் கருதுகிறேன் என்று ஜெயந்திரன் தெரிவித்தார். தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் (எச்டிஏஆர்) உள்ள சிசிடிவி கேமராக்கள், 2014ஆம் ஆண்டிலிருந்து செயல்படாத காரணத்தால், சிறுமி லாரணியாவிற்கான சிகிச்சையின் இறுதி நேர காட்சி பதிவு வழங்க இயலவில்லை என லாரணியா மரணமடைந்த விவகாரத்தை புலன் விசாரணை செய்து வரும் சுயேச்சைக் குழு கூறியிருப்பது பற்றி அவர் கருத்துரைத்தார். மருத்துவமனைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை என்பது பொதுமக்கள் பார்வையில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்குநாள் நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துவரும் இந்தக் காலத்தில் சாதாரணமாக தனிநபர் வீட்டிலேயே சிசிடிவி கேமராக் கள் செய்லபடுத்தப்படும் நிலையில் முக்கிய பொது இடங்களில் கேமராக்களின் அவசியம் குறித்து டாக்டர் இவ்வாறு கூறியது மக்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. மார்ச் 14ஆம் தேதியில் இருந்து கடுமையான காய்ச்சலுக்கு ஆளான லாரணியா மார்ச் 20ஆம் தேதி காலமானார். லாரணியா மருத்துவமனை அதிகாரி களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டபோது உயிரு டன் இருந்ததாக அவரின் தாயார் பி.பிரேம்ஸ்ரீ கூறினார். ஆனால், சுமார் ஒரு மணி நேரத்திற்கு முன்னரே மரண மடைந்துவிட்ட சிறுமியை ஏன் கொண்டு வந்தீர்கள் என தன்னிடம் பின்னர் வினவப்பட்டதாக அவர் தெரிவித்தார். அந்த சிறுமி உயிரற்ற நிலையில் மருத்துவ மனைக்கு கொண்டு வரப்பட் டதாக எச்டிஏஆர் இயக்குநர் டாக்டர் டிங் லாய் மிங் மார்ச் 24ஆம் தேதி ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தை புலனாய்வு செய்ய சுகாதார அமைச்சினால் நியமிக்கப்பட்ட சுயேச்சை நிபு ணர்கள் குழு கடந்த திங்கட் கிழமை சிறுமி லாரணியா குடும்பத்தினருடன் ஒரு சந்திப்பை நடத்தியது. சிறுமி மரணமடைந்த இரவு அவருடைய உடல்நிலை எப்படி இருந்தது என்பது பற்றி யார் கூறு வது சரி என்பதற்கான ஆதாரம் ஏதும் கிடையாதென அந்த குழு வினர் குடும்பத்தாரிடம் கூறியுள்ளனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்